• Nov 26 2024

தமிழ் இளைஞர்கள் வெளிப்படைதன்மையையே விரும்புகின்றனர்- நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Tamil nila / Sep 1st 2024, 10:29 am
image

வடக்கு இளைஞர்களுக்கும், தெற்கு இளைஞர்களுக்கும் ஒரே வகையான பிரச்சினைகளே உள்ளன. எனவே, சரியான முடிவை எடுத்தால் அவை நிச்சயம் தீரும். வடக்கு அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களுக்காகவே எமது முடிவுகள் அமையும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பியகம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஏனைய வேட்பாளர்கள் சமாளிப்பு பாணியில் கருத்துகளை முன்வைத்துவரும் நிலையில், மக்களை சமாளிக்கும் வகையில் நீங்கள் ஏன் கருத்துகளை வெளியிடுவதில்லை என  ஒருவர் என்னிடம் கேட்டார்.

வாக்குகளுக்காக ஏன் பொய்கூற வேண்டும்? முடியாது என்றால் முடியாதுதான் என நான் பதிலளித்தேன். வடக்கு, தெற்கு என்பது பிரச்சினை அல்ல. தற்போதைய இளைஞர்கள் புதிய தலைமுறையினர். அவர்கள் வெளிப்படைதன்மையை எதிர்பார்க்கின்றனர்.

தெற்கில் இளைஞர்களுக்குள்ள வேலையின்மை பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் காணப்படுகின்றது. தெற்கு இளைஞர்களுக்கு கல்வியில் உள்ள பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் உள்ளது.

தெற்கில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கின்ற பொருளாதார பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் இருக்கின்றது. மாறுபட்ட பிரச்சினை இல்லை. நாம் நாடு பற்றி சிந்தித்து சரியான முடிவை எடுத்தால் வடக்கு மற்றும் தெற்கு இளைஞர்களின் பிரச்சினைகள் தீரும். சிலவேளை அந்த முடிவுகள் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை தீர்க்காமல் இருக்கலாம்.

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கிடையில் வேறுபாடுகள் இல்லை. 

அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட்டுள்ளது. நாட்டு கலாசாரத்துக்கு எதிரான விடயங்கள் உள்ளன. ” – என்றார்.

தமிழ் இளைஞர்கள் வெளிப்படைதன்மையையே விரும்புகின்றனர்- நாமல் ராஜபக்ச தெரிவிப்பு வடக்கு இளைஞர்களுக்கும், தெற்கு இளைஞர்களுக்கும் ஒரே வகையான பிரச்சினைகளே உள்ளன. எனவே, சரியான முடிவை எடுத்தால் அவை நிச்சயம் தீரும். வடக்கு அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களுக்காகவே எமது முடிவுகள் அமையும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.பியகம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,“ வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஏனைய வேட்பாளர்கள் சமாளிப்பு பாணியில் கருத்துகளை முன்வைத்துவரும் நிலையில், மக்களை சமாளிக்கும் வகையில் நீங்கள் ஏன் கருத்துகளை வெளியிடுவதில்லை என  ஒருவர் என்னிடம் கேட்டார்.வாக்குகளுக்காக ஏன் பொய்கூற வேண்டும் முடியாது என்றால் முடியாதுதான் என நான் பதிலளித்தேன். வடக்கு, தெற்கு என்பது பிரச்சினை அல்ல. தற்போதைய இளைஞர்கள் புதிய தலைமுறையினர். அவர்கள் வெளிப்படைதன்மையை எதிர்பார்க்கின்றனர்.தெற்கில் இளைஞர்களுக்குள்ள வேலையின்மை பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் காணப்படுகின்றது. தெற்கு இளைஞர்களுக்கு கல்வியில் உள்ள பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் உள்ளது.தெற்கில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கின்ற பொருளாதார பிரச்சினைதான் வடக்கு இளைஞர்களுக்கும் இருக்கின்றது. மாறுபட்ட பிரச்சினை இல்லை. நாம் நாடு பற்றி சிந்தித்து சரியான முடிவை எடுத்தால் வடக்கு மற்றும் தெற்கு இளைஞர்களின் பிரச்சினைகள் தீரும். சிலவேளை அந்த முடிவுகள் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளை தீர்க்காமல் இருக்கலாம்.பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கிடையில் வேறுபாடுகள் இல்லை. அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட்டுள்ளது. நாட்டு கலாசாரத்துக்கு எதிரான விடயங்கள் உள்ளன. ” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement