• Sep 20 2024

திலீபன் உயிரிழந்தும் 36 வருடங்களாக தமிழர்கள் அடிமைகளாகவே உள்ளனர் - கஜேந்திரன்...!samugammedia

Anaath / Sep 23rd 2023, 12:27 pm
image

Advertisement

குண்டுத்தாக்கல் நடைபெற்ற பின்னரும் விவாதகள் நடைபெற்றிருக்கிறது ஆனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு பதிலாக அந்த சூத்திரதாரிகள்  மிக கெட்டித்தனமாக பாதுகாக்க பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

ஆனாலும்  இப்பொழுது குண்டுத்தாக்குதலோடு சந்தேகிக்கபடுகின்ற கோட்டபாஜ ராஜபக்ஷவினுடைய வலது இடது கைகளாக இருந்தவர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு அதிலே சம்பந்தப்பட்ட சூத்திரதயாரிகளில் ஒருவரான அசாத் மௌலானா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கின்ற நிலைமையிலே பிள்ளையான் அவர்களுக்கும் கோட்டபாஜ ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இந்த குடுத்தாக்குதல் தொடர்பாக எவ்வளவு தொடர்புகள் இருந்தது என்பது தெளிவாக புலனாகிறது

இங்கே  கவலைக்குரிய விடயம்  என்ன என்று சொன்னால், இந்த குண்டுத்தாக்குதலை நடத்த காரணமாக இருந்த சூத்திரதாரிகளை பற்றி விவாதிப்பதை விட அந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலே முஸ்லீம் சமூகத்தை புண் படுத்துகின்ற விதமாக, இழிவு படுத்துகின்ற விதமாக இங்கு விவாதங்கள் நடந்து கொண்டிருப்பது என்பது இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும் கூட இந்த நாடு சரியான முடிவு எடுத்து தவறுகளை உணர்ந்து தண்டனை வழங்கி சரியான பாதையிலே  பயணிக்க  தயாராக இல்லை என்பதனை  இது எடுத்து காட்டு கிறது.

இன்று இந்த நாட்டினுடைய இராணுவ உளவு கட்டமைப்பு என்பது  இந்த சொந்த நாட்டுக்குள்ளே வேறு சக்திகளுக்கு விலை போய் அல்லது  அதிகார பீடத்தில் உள்ள சிலரை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான ஒரு கூலி  அமைப்பாக மாறி  செயற் பட்டு கொண்டிருக்கிறது என்பது இந்த சம்பவங்களூடாக நிரூபிக்க பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்கின்ற பொழுது இப்பொழுது பொழுது கடந்த வாரம் எங்களுக்கு நடைபெற்ற ஒரு சம்பவத்தை சுட்டி கட்ட விரும்புகிறேன்.  நாங்கள் எங்ககளினுடைய தேசத்தின் உரிமைக்காக  ஒரு ஆயுத போராடத்தினூடாக  ஒரு ஜனநாயக வழிமுறையக்கை தெரிவு செய்து அகிம்சை வழியை தெரிவு செய்து உண்ணா நோன்பிருந்து தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி உணாவிரத போராட்டம்  ஒன்றை 1987 ஆம்  ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி தியாக தீபம் திலீபன் அவர்களும் ஆரம்பித்திருந்தார். 

அவருடைய கோரிக்கைகள்   நிறைவேற்ற படாத நிலையிலே அவர் துரதிஷ்ட வசமாக 12 நாட்களாக உணவுமருந்தாமல்  நீருமருந்தாமல் உயிரிழக்கவேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்து 36 வருடங்கள் கடந்த நிலைமையிலும் தமிழர்கள் இன்றும் நாங்கள் அடிமைகளாக தான்  வாழுகின்றோம். இந்த நாட்டை ஆளுகின்ற பௌத்த பேரினவாதம் தான் எங்களை அடிமைகளாக வைத்திருக்கிறது. 

இன்றும் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் பௌத்த பேரினவாத இனவெறியர்கள் அடக்கு முறையின் கீழும் நாங்கள் சிக்கு பட்டிருக்கிறோம். இந்த நிலையிலே நாங்கள் அவரை நினைவு கோருகின்ற அதே நேரத்திலே அரசியல் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

அந்த வகையில் கடந்த 15 ஆம்  திகதி மிக அமைதியான வழியில்  பொத்துவில் நகரத்திலிருந்து ஒரு ஊர்தியிலே எங்களுடைய தியாக தீபம் திலீபனுடைய திருவுருவப்படத்தை தாங்கியவாறு மிக அமைதியாக நாங்கள் வந்துகொண்டிருந்த பொழுது, அக்கரைப்பற்றில் எங்களுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அது ஒரு வன்முறையாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடைபெற்றது. அதிலே ஒரு சில முஸ்லிம் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். 

அது நிச்சமாக எங்களுக்கு தெரியும் முஸ்லீம் மக்கள் அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக அக்கரைப்பாற்றிலிருந்த இராணுவமுகாமிலிருந்த உளவுப்பிரிவினர்தான் அந்த ஆர்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். 

எனவே நாங்கள் மிக தெளிவாக எங்களுடைய மக்களுக்கு சொல்லியிருக்கிறோம். முஸ்லீம் மக்கள் எந்த ஒரு இடத்திலும்  எங்களோடு இணைந்திருக்கிறார்களே  தவிர எங்களுக்கு எதிராக ஒருபோது செயல்படவில்லை என்பதை நாங்கள் எங்களுடைய மக்களுக்கு சொல்லியிருக்கிறோம்.  

தொடர்ந்து நாங்கள் பயணிக்கின்ற போது முரக்கொட்டான்சேனையிலே இராணுவ முகாமுக்கு முன்பாக இருந்து ஒரு கூட்டம் எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இருந்தது.  முரக்கொட்டான்சேனை இராணுவ முகாமை சேர்ந்த பண்டார மற்றும் தினேஷ் இந்த இரண்டு இராணுவ உளவு பிரிவினர் தான் அந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். அதே நபர்கள் ஏற்பாடு செய்த அந்த கும்பல் எங்களை முந்திச்சென்று வாழைச்சனையிலும்  நாவலடிச் சந்நிதியிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து நாங்கள் திருகோணமலைக்கு பயணிக்கின்ற போது சேருவளை  பகுதியிலே இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின் ஏற்பாட்டில்  பௌத்த பிக்கு ஒருவரின்  தலைமையில் எங்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. 

ஆனால் இரவு வேளை நாங்கள் செல்வதை தவிர்த்ததனால் நாங்கள் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து கொண்டோம். ஆனால் 17 ஆம் திகதி நாங்கள் தாம்பலகாமத்திலிருந்து திருகோணமலை வரை A6 வீதியூடாக பயணித்துக்கொண்டிருக்கிற பொழுது சரிதாபுர பகுதியிலே வைத்து எங்களுக்கு ஒரு காடைத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொத்துவிலில் நாங்கள் ஆரம்பித்ததிலிருந்து 17ஆம் திகதி எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற கணம் வரைக்கும் எங்களுக்கு ம்குன்னும் பின்னுமாக புலனாய்வு பிரிவினர் மோட்டார் சைக்கிளிலும் ஆட்டோக்களிலும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களினுடைய விவரங்கள் தம்பலகாமம் போலீசாரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

மோட்டார் சைக்கிளின் இலக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இராணுவ புலனாய்வு பிரிவினரால் போலீஸ் புலனாய்வு பிரிவினரின் உடன்பாட்டோடு எண்கள் மீது 17 ஆம் திகதி சரிதாபுர பகுதியிலே மிக வெறித்தனமான கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

அகிம்சை வழியே பயணித்த உயிர் துறந்த ஒரு நபரை நாங்கள் ஜனநாயக வழியிலே அமைதியாக நினைவு கோருகின்ற பொழுது நாங்கள் என்ன கேட்க்கின்றோம். எங்களுடைய உரிமைகளை அங்கீகரியுங்கள் என்று தான் கேட்க்கின்றோம். நாங்கள் வேறு எதனையும் கேட்கவில்லை. நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் என்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று இனங்கண்டுகொண்ட பின்னர்  அங்கிருந்தவர்கள்  சிங்க கோடியை கையிலேந்தி இருந்தார்கள். அந்த சிங்க கொடி வைத்திருந்த கட்டையால் என்தலையில் அடித்தார்கள் உடல் மீது தாக்கினார்கள், சிலர் ஹெல்மட்டால் என் தலைமீது அடித்தார்கள். என்னோடு வந்திருந்த  ஏனைய உறுப்பினர்கள் மீது எங்களுடைய திருகோணமலை மாவட்ட குகன் மோசமாக தாக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமாரராஜா மோசமாக தாக்கப்பட்டார். 

அதே போன்று எங்களுடைய திருகோணமலை உதவி அமைப்பாளர் ஸ்ரீபிரசாத் மிக மோசமாக தாக்கப்பட்டார். எங்களுடைய சட்டத்தரணி காண்டீபன் அண்ணா வயிற்றிலே கட்டையால் குத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நடை பெற்ற மறுநாள் ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அதற்கு பிற்பாடு நேற்றைய  தினம் (வியாழகிழமை) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தை  அச்சுறுத்தி  பொலிசாரும் 9 பிக்குகளும் சென்று நீதி மன்றத்திற் அச்சுறுத்தி அவர்களை பிணையில் எடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிணை கொடுக்காவிட்டால் கலவரம் வெடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

இங்கே ஈஸ்டர்  குண்டு தாக்குதலில் இராணுவ உளவுத்துறை சம்பந்தப்பட்டிருக்கிற பொழுது இன்று அது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்கு பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற சூழலிலே இராணுவஉறுப்பினர்களால் எண்கள் மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தாக்குதலாளிகளை காவலாளிகளால் நீதிமன்றத்தை அச்சுறுத்தி விடுதலை செய்திருக்கிறது. இந்த நிலை தொடருமாக  இருந்தால் இந்த நாட்டிலே மிகப்பெரிய இதை விட மோசமான நிலைமைகள் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

திலீபன் உயிரிழந்தும் 36 வருடங்களாக தமிழர்கள் அடிமைகளாகவே உள்ளனர் - கஜேந்திரன்.samugammedia குண்டுத்தாக்கல் நடைபெற்ற பின்னரும் விவாதகள் நடைபெற்றிருக்கிறது ஆனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு பதிலாக அந்த சூத்திரதாரிகள்  மிக கெட்டித்தனமாக பாதுகாக்க பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனாலும்  இப்பொழுது குண்டுத்தாக்குதலோடு சந்தேகிக்கபடுகின்ற கோட்டபாஜ ராஜபக்ஷவினுடைய வலது இடது கைகளாக இருந்தவர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு அதிலே சம்பந்தப்பட்ட சூத்திரதயாரிகளில் ஒருவரான அசாத் மௌலானா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கின்ற நிலைமையிலே பிள்ளையான் அவர்களுக்கும் கோட்டபாஜ ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இந்த குடுத்தாக்குதல் தொடர்பாக எவ்வளவு தொடர்புகள் இருந்தது என்பது தெளிவாக புலனாகிறதுஇங்கே  கவலைக்குரிய விடயம்  என்ன என்று சொன்னால், இந்த குண்டுத்தாக்குதலை நடத்த காரணமாக இருந்த சூத்திரதாரிகளை பற்றி விவாதிப்பதை விட அந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலே முஸ்லீம் சமூகத்தை புண் படுத்துகின்ற விதமாக, இழிவு படுத்துகின்ற விதமாக இங்கு விவாதங்கள் நடந்து கொண்டிருப்பது என்பது இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும் கூட இந்த நாடு சரியான முடிவு எடுத்து தவறுகளை உணர்ந்து தண்டனை வழங்கி சரியான பாதையிலே  பயணிக்க  தயாராக இல்லை என்பதனை  இது எடுத்து காட்டு கிறது.இன்று இந்த நாட்டினுடைய இராணுவ உளவு கட்டமைப்பு என்பது  இந்த சொந்த நாட்டுக்குள்ளே வேறு சக்திகளுக்கு விலை போய் அல்லது  அதிகார பீடத்தில் உள்ள சிலரை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான ஒரு கூலி  அமைப்பாக மாறி  செயற் பட்டு கொண்டிருக்கிறது என்பது இந்த சம்பவங்களூடாக நிரூபிக்க பட்டிருக்கிறது.இது ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்கின்ற பொழுது இப்பொழுது பொழுது கடந்த வாரம் எங்களுக்கு நடைபெற்ற ஒரு சம்பவத்தை சுட்டி கட்ட விரும்புகிறேன்.  நாங்கள் எங்ககளினுடைய தேசத்தின் உரிமைக்காக  ஒரு ஆயுத போராடத்தினூடாக  ஒரு ஜனநாயக வழிமுறையக்கை தெரிவு செய்து அகிம்சை வழியை தெரிவு செய்து உண்ணா நோன்பிருந்து தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி உணாவிரத போராட்டம்  ஒன்றை 1987 ஆம்  ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி தியாக தீபம் திலீபன் அவர்களும் ஆரம்பித்திருந்தார். அவருடைய கோரிக்கைகள்   நிறைவேற்ற படாத நிலையிலே அவர் துரதிஷ்ட வசமாக 12 நாட்களாக உணவுமருந்தாமல்  நீருமருந்தாமல் உயிரிழக்கவேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்து 36 வருடங்கள் கடந்த நிலைமையிலும் தமிழர்கள் இன்றும் நாங்கள் அடிமைகளாக தான்  வாழுகின்றோம். இந்த நாட்டை ஆளுகின்ற பௌத்த பேரினவாதம் தான் எங்களை அடிமைகளாக வைத்திருக்கிறது. இன்றும் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் பௌத்த பேரினவாத இனவெறியர்கள் அடக்கு முறையின் கீழும் நாங்கள் சிக்கு பட்டிருக்கிறோம். இந்த நிலையிலே நாங்கள் அவரை நினைவு கோருகின்ற அதே நேரத்திலே அரசியல் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அந்த வகையில் கடந்த 15 ஆம்  திகதி மிக அமைதியான வழியில்  பொத்துவில் நகரத்திலிருந்து ஒரு ஊர்தியிலே எங்களுடைய தியாக தீபம் திலீபனுடைய திருவுருவப்படத்தை தாங்கியவாறு மிக அமைதியாக நாங்கள் வந்துகொண்டிருந்த பொழுது, அக்கரைப்பற்றில் எங்களுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அது ஒரு வன்முறையாக மாற்றுவதற்கான முயற்சிகளும் நடைபெற்றது. அதிலே ஒரு சில முஸ்லிம் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அது நிச்சமாக எங்களுக்கு தெரியும் முஸ்லீம் மக்கள் அந்த போராட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக அக்கரைப்பாற்றிலிருந்த இராணுவமுகாமிலிருந்த உளவுப்பிரிவினர்தான் அந்த ஆர்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். எனவே நாங்கள் மிக தெளிவாக எங்களுடைய மக்களுக்கு சொல்லியிருக்கிறோம். முஸ்லீம் மக்கள் எந்த ஒரு இடத்திலும்  எங்களோடு இணைந்திருக்கிறார்களே  தவிர எங்களுக்கு எதிராக ஒருபோது செயல்படவில்லை என்பதை நாங்கள் எங்களுடைய மக்களுக்கு சொல்லியிருக்கிறோம்.  தொடர்ந்து நாங்கள் பயணிக்கின்ற போது முரக்கொட்டான்சேனையிலே இராணுவ முகாமுக்கு முன்பாக இருந்து ஒரு கூட்டம் எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இருந்தது.  முரக்கொட்டான்சேனை இராணுவ முகாமை சேர்ந்த பண்டார மற்றும் தினேஷ் இந்த இரண்டு இராணுவ உளவு பிரிவினர் தான் அந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். அதே நபர்கள் ஏற்பாடு செய்த அந்த கும்பல் எங்களை முந்திச்சென்று வாழைச்சனையிலும்  நாவலடிச் சந்நிதியிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.தொடர்ந்து நாங்கள் திருகோணமலைக்கு பயணிக்கின்ற போது சேருவளை  பகுதியிலே இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின் ஏற்பாட்டில்  பௌத்த பிக்கு ஒருவரின்  தலைமையில் எங்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் இரவு வேளை நாங்கள் செல்வதை தவிர்த்ததனால் நாங்கள் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து கொண்டோம். ஆனால் 17 ஆம் திகதி நாங்கள் தாம்பலகாமத்திலிருந்து திருகோணமலை வரை A6 வீதியூடாக பயணித்துக்கொண்டிருக்கிற பொழுது சரிதாபுர பகுதியிலே வைத்து எங்களுக்கு ஒரு காடைத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொத்துவிலில் நாங்கள் ஆரம்பித்ததிலிருந்து 17ஆம் திகதி எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற கணம் வரைக்கும் எங்களுக்கு ம்குன்னும் பின்னுமாக புலனாய்வு பிரிவினர் மோட்டார் சைக்கிளிலும் ஆட்டோக்களிலும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களினுடைய விவரங்கள் தம்பலகாமம் போலீசாரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் இலக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இராணுவ புலனாய்வு பிரிவினரால் போலீஸ் புலனாய்வு பிரிவினரின் உடன்பாட்டோடு எண்கள் மீது 17 ஆம் திகதி சரிதாபுர பகுதியிலே மிக வெறித்தனமான கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அகிம்சை வழியே பயணித்த உயிர் துறந்த ஒரு நபரை நாங்கள் ஜனநாயக வழியிலே அமைதியாக நினைவு கோருகின்ற பொழுது நாங்கள் என்ன கேட்க்கின்றோம். எங்களுடைய உரிமைகளை அங்கீகரியுங்கள் என்று தான் கேட்க்கின்றோம். நாங்கள் வேறு எதனையும் கேட்கவில்லை. நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் என்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று இனங்கண்டுகொண்ட பின்னர்  அங்கிருந்தவர்கள்  சிங்க கோடியை கையிலேந்தி இருந்தார்கள். அந்த சிங்க கொடி வைத்திருந்த கட்டையால் என்தலையில் அடித்தார்கள் உடல் மீது தாக்கினார்கள், சிலர் ஹெல்மட்டால் என் தலைமீது அடித்தார்கள். என்னோடு வந்திருந்த  ஏனைய உறுப்பினர்கள் மீது எங்களுடைய திருகோணமலை மாவட்ட குகன் மோசமாக தாக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமாரராஜா மோசமாக தாக்கப்பட்டார். அதே போன்று எங்களுடைய திருகோணமலை உதவி அமைப்பாளர் ஸ்ரீபிரசாத் மிக மோசமாக தாக்கப்பட்டார். எங்களுடைய சட்டத்தரணி காண்டீபன் அண்ணா வயிற்றிலே கட்டையால் குத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நடை பெற்ற மறுநாள் ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.அதற்கு பிற்பாடு நேற்றைய  தினம் (வியாழகிழமை) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தை  அச்சுறுத்தி  பொலிசாரும் 9 பிக்குகளும் சென்று நீதி மன்றத்திற் அச்சுறுத்தி அவர்களை பிணையில் எடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிணை கொடுக்காவிட்டால் கலவரம் வெடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கே ஈஸ்டர்  குண்டு தாக்குதலில் இராணுவ உளவுத்துறை சம்பந்தப்பட்டிருக்கிற பொழுது இன்று அது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்கு பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற சூழலிலே இராணுவஉறுப்பினர்களால் எண்கள் மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலாளிகளை காவலாளிகளால் நீதிமன்றத்தை அச்சுறுத்தி விடுதலை செய்திருக்கிறது. இந்த நிலை தொடருமாக  இருந்தால் இந்த நாட்டிலே மிகப்பெரிய இதை விட மோசமான நிலைமைகள் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement