• Oct 04 2024

வரி அதிகரிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்

Chithra / Feb 4th 2024, 10:49 am
image

Advertisement

எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட வேண்டிவரும் எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் விற்பனையில் மூன்று சதவீதத்திற்கும் குறைவான கமிஷன் பெறுவதாகவும், அந்த கமிஷனில் 18 சதவீதத்தை வற் ஆக செலுத்த வேண்டும் என்றும் சங்கம் கூறுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இந்த தொகையில் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புப் பணிகளுக்கான பணம் ஆகியவற்றை ஒதுக்கிய பின்னர், இந்த தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.


வரி அதிகரிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட வேண்டிவரும் எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.எரிபொருள் விற்பனையில் மூன்று சதவீதத்திற்கும் குறைவான கமிஷன் பெறுவதாகவும், அந்த கமிஷனில் 18 சதவீதத்தை வற் ஆக செலுத்த வேண்டும் என்றும் சங்கம் கூறுகின்றது.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இந்த தொகையில் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புப் பணிகளுக்கான பணம் ஆகியவற்றை ஒதுக்கிய பின்னர், இந்த தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement