• Nov 11 2024

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறையும்! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

Chithra / Aug 30th 2024, 11:02 am
image


எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

உழைக்கும் போது செலுத்தப்படும் வரியை திருத்தியமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அது தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பதன் பின்னர், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறையும் நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.உழைக்கும் போது செலுத்தப்படும் வரியை திருத்தியமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அது தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பதன் பின்னர், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement