அதி நவீன தயாரிப்புக்களுடன் அமைந்ததான உலக ரோபோ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று ஆரம்பமானது.
200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 1500க்கும் மேற்பட்ட தயாரிப்புக்கள் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 20 மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாண்டின் ரோபோ மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதி நவீன தயாரிப்புக்களுடன் உருவான ரோபோக்கள் தேநீர் போடும், ஆடைகள் மடிக்கும், நடனம் ஆடும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் உருவான மனித உருவ ரோபோ ஒன்று பட்டப்படிப்புக் கற்கைநெறியில் இணைந்துள்ளது.
இந்த நிலையில் பல தரப்பட்ட நிறுவனங்களின் படைப்புக்களுடன் பல்வேறு விதமாக ரோபோக்கள் உருவாகியுள்ளன.
அதன் ஆரம்ப நிகழ்வு இன்று சீனாவில் ஆரம்பமான நிலையில் அங்கு குறிப்பிட்ட ரோபோக்கள் தேநீர் போடுவதாகவும், குத்துச் சண்டையிடுவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்க வைத்துள்ளது.
தற்பொழுது அறிமுகமாக AI தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வகையிலான தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் நிலையில் குறித்த ரோபோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேநீர் போடும் ரோபோ - சீனாவில் பிரம்மாண்டம்; அதிநவீன தயாரிப்புக்களுடன் உலக ரோபோ மாநாடு அதி நவீன தயாரிப்புக்களுடன் அமைந்ததான உலக ரோபோ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று ஆரம்பமானது. 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 1500க்கும் மேற்பட்ட தயாரிப்புக்கள் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாண்டின் ரோபோ மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதி நவீன தயாரிப்புக்களுடன் உருவான ரோபோக்கள் தேநீர் போடும், ஆடைகள் மடிக்கும், நடனம் ஆடும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் உருவான மனித உருவ ரோபோ ஒன்று பட்டப்படிப்புக் கற்கைநெறியில் இணைந்துள்ளது. இந்த நிலையில் பல தரப்பட்ட நிறுவனங்களின் படைப்புக்களுடன் பல்வேறு விதமாக ரோபோக்கள் உருவாகியுள்ளன. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று சீனாவில் ஆரம்பமான நிலையில் அங்கு குறிப்பிட்ட ரோபோக்கள் தேநீர் போடுவதாகவும், குத்துச் சண்டையிடுவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்க வைத்துள்ளது. தற்பொழுது அறிமுகமாக AI தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வகையிலான தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் நிலையில் குறித்த ரோபோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.