• Apr 03 2025

தோட்டத்தை பார்வையிட சென்ற ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி..!

Chithra / Jan 16th 2024, 1:00 pm
image

 

லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும்,

இன்று காலை தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


தோட்டத்தை பார்வையிட சென்ற ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி.  லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும்,இன்று காலை தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement