• Nov 28 2024

விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை ஆசிரியர்கள் மூடுகின்றனர்! அமைச்சர் மனுஷ குற்றச்சாட்டு

Chithra / Jul 19th 2024, 7:37 am
image

 

தமிழ் ஈழ விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை தொழிற்சங்கத்தினர் வாரத்தில் இரண்டு நாட்கள் மூடுகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மத்துகம பொது விளையாட்டரங்கில்  நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நாட்டில் விடுதலை புலிகள் , முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு  அனுமதிக்கவில்லை, 

ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர்.

தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.

பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மகிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை ஆசிரியர்கள் மூடுகின்றனர் அமைச்சர் மனுஷ குற்றச்சாட்டு  தமிழ் ஈழ விடுதலை புலிகளிளால் கூட மூடப்படாத பாடசாலைகளை தொழிற்சங்கத்தினர் வாரத்தில் இரண்டு நாட்கள் மூடுகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மத்துகம பொது விளையாட்டரங்கில்  நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இந்த நாட்டில் விடுதலை புலிகள் , முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு  அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர்.தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மகிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement