• Mar 12 2025

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்; அதிர்ச்சியில் பெற்றோர்! அரசு எடுத்த நடவடிக்கை

Chithra / Mar 11th 2025, 1:16 pm
image

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து, அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பை சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில்  தற்போது பரவி வருகிறது.

இந்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இந்த நபர்,

அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இளம் மாணவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய ஆசிரியர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.

எனினும் மாணவர்களை மண்டியிட்டு அடிக்க கட்டாயப்படுத்திய இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்; அதிர்ச்சியில் பெற்றோர் அரசு எடுத்த நடவடிக்கை தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து, அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பை சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில்  தற்போது பரவி வருகிறது.இந்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இந்த நபர்,அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.இளம் மாணவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய ஆசிரியர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.எனினும் மாணவர்களை மண்டியிட்டு அடிக்க கட்டாயப்படுத்திய இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement