• Nov 24 2024

எதிர்வரும் 09ஆம் திகதி பணிபகிஸ்கரிப்புக்கு செல்லும் ஆசிரியர்கள் - விடுக்கப்பட்ட அழைப்பு!

Tamil nila / Jul 6th 2024, 10:51 pm
image

எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன போராட்டத்தில் சகல ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர் ஆலோசகர்களை ஒன்றிணையுமாறு இலங்கை ஆசிரியுர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்.உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டத்தினை கடந்த 12ம் தேதி பாடசாலை முடிவடைந்ததன் பிற்பாடு நாம் ஆரம்பித்தோம் இந்த போராட்டம் இலங்கையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளிள் உள்ள ஆசிரியர்கள் தமது சம்பள நிலவைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக நடைபெற்று மீண்டும் 26 ஆம் தேதி கொழும்பில் மற்றும் ஏனைய வலயங்களிலும் நாம் சுகயீண போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம்.

இந்த சுகயீண போராட்டம் ஆனது 26 ஆம் தேதி ஆரம்பித்த அன்று கொழும்பில் நடைபெற்ற எமது கவனை ஈர்ப்பு போராட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய ஜனநாயக ரீதியான போராட்டத்தின் போது எம் மீது கண்ணீர் புகை தண்ணீர் தாரையும் எம்மீது வீசப்பட்டது அதில் பல ஆசிரியர்கள் பாதிப்படைந்திருந்தார்கள்.

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மறுநாள் நாம் மீண்டும் சுகயீன போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தை அரச ஊழியர்கள் சங்கங்கள், சகல தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 08 ஆம் திகதியும் 09 திகதியும் சகல அரச ஊழியர் சங்கங்களும் நாடலாவிய ரீதியில் செய்வதற்கு உத்தேசித்துள்ளனர்.

இந்த ரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எதிர்வரும் ஒன்பதாம் தேதி மீண்டும் ஓர் சுகயீன போராட்டத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம் ஒன்பதாம் தேதி சுகயீன போராட்டத்தில் சகல ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் அனைவரும் ஒன்றிணைமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களுடைய இந்த கல்வி நிலைக்கு காரணமான முழு பொறுப்பினையும் இலங்கை அரசும் ரணில் ராஜபக்ச அரசுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் இதே நேரத்தில் அண்மையில் எமது நாட்டினுடைய ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஒரு ஆலோசனை பெறுவதாகவும் அந்த சட்டமா அதிபரின் ஊடாக பெறப்படும் ஆலோசனை ஊடாக எமது போராட்டத்தினை நசுக்குவது தொடர்பாக அவர் பல ஆலோசனைகளை பெற்றிருப்பதாகவும் எமது நியாயமான ஜனநாயக போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கில் பல தகவல்களை பெறுவதாகவும் கூறப்பட்டபோது இந்த ஆசிரியர்கள் அதிபர்கள் நடத்தும் நியாயமான சம்பள நிலுவையை பெறும் போராட்டத்தை முறியடிப்பதற்காக அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவதாக கூறி இருக்கின்றார்.

நாம் ஒன்றை மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறுகின்றோம் நீங்கள் இந்த நாட்டினுடைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமான குற்றவாளிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது அந்த அதிரடி தீர்ப்பு தொடர்பாக இந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய ராஜபக்ச குடும்பம் தொடர்பாக நீங்கள் சட்டமா அதிபரிடம் நியாயமான ஆலோசனைகளை விடுத்து நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அந்த பணத்தினை மீள பெற்றிருந்தால் இந்த நிலமை ஏட்பட்டிருக்காது.

கடந்த காலங்களில் அனாவசியமாக பெரும்பாலாக பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள், பல மனித உரிமைகளுக்கு காரணமானவர்கள் ராஜாங்க அமைச்சர்கள் ஆகவும் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் இவ்வாறான ஒரு அமைச்சு வைத்துக்கொண்டு எமது நியாயமான போராட்டத்தை முறியடிப்பதற்காக அண்மைக்காலமாக 40-க்கும் மேற்பட்ட சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்றியிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

இதே நேரம் அவர் கருத்து சுதந்திரம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களும் தொழிற்சங்கங்களை முறியடிப்பதற்காக ஏராளமான சட்டங்களையும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு இருகின்றதேதவிர எமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஜனநாயக போராட்டத்திற்கான நியாயத்தினை இந்த ரணில் ராஜபக்ஷ அரசு முறியடித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை வன்மையாக கண்டிகின்றோம்.

எதிர்வரும் எட்டாம் திகதி எமது சகல ஆசிரியர்களும் அதிபர்களும் ஒன்றிணைந்து நமது சுகயீன போராட்டத்தினை அறிவிக்குமாறு இது அரசுக்கு ஏற்கனவே அது தொடர்பாக தெளிவுபடுத்தியிருப்பதன் காரணமாக அன்றைய தினம் சகல பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறும் அன்றைய தினம் சகல பெற்றோர்களும் இந்த மாணவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துமாறு நாம் வினையமாக எமது பெற்றோர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

இதே நேரம் அண்மையில் இடம்பெற்ற நமது நியாயமான போராட்டங்களின் போது பெரும்பாலான பாடசாலைகளில் எமது பெற்றோர்களும் எம்மிடம் இணைந்து இருப்பதை நாம் அவதானித்தோம் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்பதோடு இந்த போராட்டம் தனிப்பட்ட ரீதியான ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டம் அல்ல மாணவர்களுடைய உரிமைகள் மாணவர்களது பல்வேறு பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கின்ற இந்த மாணவர்களுடைய அதாவது கல்வி உரிமைகள் தொடர்பாகவும் தான் நாங்கள் அழுத்தங்களை கொண்டு இருக்கின்றோம் என்பதனை மீண்டும் இந்த பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம் உங்களுடைய மாணவர்களது கல்வி தொடர்பாகவும் இந்த அரசினுடைய அதாவது ரணில் ராஜபக்ஷ அரசு எம்மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் எம்மீது நடத்தப்படுகின்ற மிலேட்சத்தனமான அச்சுறுத்தல்களுக்கும் உங்களையும் உங்களது பிள்ளைகளையும் எமது எதிர்கால நலனுக்காக இந்த கல்வியை நாம் மீண்டும் இந்த ரணில் ராஜபக்ச அரசிடம் இருந்து மீட்டெடுக்கும் வரை உங்களது முழுமையான ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த போராட்டமானது எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டம் மாத்திரம் அல்ல மாணவர்களது இன்று மாணவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி இருக்கின்றார்கள் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை இடை விலகல்களும் அதிகரித்து இருக்கின்றது.

எனவே அவர்களுடைய எரிபொருள் பிரச்சனை அதாவது பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் பெரும்பாலான மாணவர்களுக்கு புத்தக பைகள் பாதனிகள் போன்றவைகளை பெறுவதற்குரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.

இந்த போராட்டம் என்பது பெற்றோர்களும் எம்முடன் இணைந்து இருக்கின்றனர் இது தனிப்பட்ட ரீதியான கல்வியை பாதிப்பது நோக்கம் அல்ல அடுத்தது நாங்கள் இந்த போராட்டத்தை ஆரம்பிக்க போகின்றோம் எனக் கூறி சகல வகையிலும் பல தடவை கல்வி அமைச்சுடனும் ஜனாதிபதியுடன் நிதி அமைச்சருடனும் பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தோம் பல தடவைகள் நாங்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம்.

பல தடவைகள் எங்களது கோரிக்கைகளை செவி சாய்க்காத காரணத்தினால் தான் நாம் இன்று பெற்றோர்களையும் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம் இதில் எந்த விதத்திலும் கல்வி பாதிப்படைவதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல இதற்கான முழு பொறுப்பையும் ரணில் ராஜபக்ஷா அரசாங்கமே என்று தெரிவித்துள்ளார்.




எதிர்வரும் 09ஆம் திகதி பணிபகிஸ்கரிப்புக்கு செல்லும் ஆசிரியர்கள் - விடுக்கப்பட்ட அழைப்பு எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன போராட்டத்தில் சகல ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர் ஆலோசகர்களை ஒன்றிணையுமாறு இலங்கை ஆசிரியுர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்.உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டத்தினை கடந்த 12ம் தேதி பாடசாலை முடிவடைந்ததன் பிற்பாடு நாம் ஆரம்பித்தோம் இந்த போராட்டம் இலங்கையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளிள் உள்ள ஆசிரியர்கள் தமது சம்பள நிலவைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக நடைபெற்று மீண்டும் 26 ஆம் தேதி கொழும்பில் மற்றும் ஏனைய வலயங்களிலும் நாம் சுகயீண போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம்.இந்த சுகயீண போராட்டம் ஆனது 26 ஆம் தேதி ஆரம்பித்த அன்று கொழும்பில் நடைபெற்ற எமது கவனை ஈர்ப்பு போராட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய ஜனநாயக ரீதியான போராட்டத்தின் போது எம் மீது கண்ணீர் புகை தண்ணீர் தாரையும் எம்மீது வீசப்பட்டது அதில் பல ஆசிரியர்கள் பாதிப்படைந்திருந்தார்கள்.இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மறுநாள் நாம் மீண்டும் சுகயீன போராட்டத்தினை ஆரம்பித்திருந்தோம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தை அரச ஊழியர்கள் சங்கங்கள், சகல தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 08 ஆம் திகதியும் 09 திகதியும் சகல அரச ஊழியர் சங்கங்களும் நாடலாவிய ரீதியில் செய்வதற்கு உத்தேசித்துள்ளனர்.இந்த ரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எதிர்வரும் ஒன்பதாம் தேதி மீண்டும் ஓர் சுகயீன போராட்டத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம் ஒன்பதாம் தேதி சுகயீன போராட்டத்தில் சகல ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் அனைவரும் ஒன்றிணைமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.மாணவர்களுடைய இந்த கல்வி நிலைக்கு காரணமான முழு பொறுப்பினையும் இலங்கை அரசும் ரணில் ராஜபக்ச அரசுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் இதே நேரத்தில் அண்மையில் எமது நாட்டினுடைய ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஒரு ஆலோசனை பெறுவதாகவும் அந்த சட்டமா அதிபரின் ஊடாக பெறப்படும் ஆலோசனை ஊடாக எமது போராட்டத்தினை நசுக்குவது தொடர்பாக அவர் பல ஆலோசனைகளை பெற்றிருப்பதாகவும் எமது நியாயமான ஜனநாயக போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கில் பல தகவல்களை பெறுவதாகவும் கூறப்பட்டபோது இந்த ஆசிரியர்கள் அதிபர்கள் நடத்தும் நியாயமான சம்பள நிலுவையை பெறும் போராட்டத்தை முறியடிப்பதற்காக அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவதாக கூறி இருக்கின்றார்.நாம் ஒன்றை மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறுகின்றோம் நீங்கள் இந்த நாட்டினுடைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமான குற்றவாளிகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது அந்த அதிரடி தீர்ப்பு தொடர்பாக இந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய ராஜபக்ச குடும்பம் தொடர்பாக நீங்கள் சட்டமா அதிபரிடம் நியாயமான ஆலோசனைகளை விடுத்து நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அந்த பணத்தினை மீள பெற்றிருந்தால் இந்த நிலமை ஏட்பட்டிருக்காது.கடந்த காலங்களில் அனாவசியமாக பெரும்பாலாக பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள், பல மனித உரிமைகளுக்கு காரணமானவர்கள் ராஜாங்க அமைச்சர்கள் ஆகவும் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் இவ்வாறான ஒரு அமைச்சு வைத்துக்கொண்டு எமது நியாயமான போராட்டத்தை முறியடிப்பதற்காக அண்மைக்காலமாக 40-க்கும் மேற்பட்ட சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்றியிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.இதே நேரம் அவர் கருத்து சுதந்திரம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களும் தொழிற்சங்கங்களை முறியடிப்பதற்காக ஏராளமான சட்டங்களையும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு இருகின்றதேதவிர எமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஜனநாயக போராட்டத்திற்கான நியாயத்தினை இந்த ரணில் ராஜபக்ஷ அரசு முறியடித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை வன்மையாக கண்டிகின்றோம்.எதிர்வரும் எட்டாம் திகதி எமது சகல ஆசிரியர்களும் அதிபர்களும் ஒன்றிணைந்து நமது சுகயீன போராட்டத்தினை அறிவிக்குமாறு இது அரசுக்கு ஏற்கனவே அது தொடர்பாக தெளிவுபடுத்தியிருப்பதன் காரணமாக அன்றைய தினம் சகல பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறும் அன்றைய தினம் சகல பெற்றோர்களும் இந்த மாணவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துமாறு நாம் வினையமாக எமது பெற்றோர்களை கேட்டுக் கொள்கின்றோம்.இதே நேரம் அண்மையில் இடம்பெற்ற நமது நியாயமான போராட்டங்களின் போது பெரும்பாலான பாடசாலைகளில் எமது பெற்றோர்களும் எம்மிடம் இணைந்து இருப்பதை நாம் அவதானித்தோம் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்பதோடு இந்த போராட்டம் தனிப்பட்ட ரீதியான ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டம் அல்ல மாணவர்களுடைய உரிமைகள் மாணவர்களது பல்வேறு பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கின்ற இந்த மாணவர்களுடைய அதாவது கல்வி உரிமைகள் தொடர்பாகவும் தான் நாங்கள் அழுத்தங்களை கொண்டு இருக்கின்றோம் என்பதனை மீண்டும் இந்த பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம் உங்களுடைய மாணவர்களது கல்வி தொடர்பாகவும் இந்த அரசினுடைய அதாவது ரணில் ராஜபக்ஷ அரசு எம்மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் எம்மீது நடத்தப்படுகின்ற மிலேட்சத்தனமான அச்சுறுத்தல்களுக்கும் உங்களையும் உங்களது பிள்ளைகளையும் எமது எதிர்கால நலனுக்காக இந்த கல்வியை நாம் மீண்டும் இந்த ரணில் ராஜபக்ச அரசிடம் இருந்து மீட்டெடுக்கும் வரை உங்களது முழுமையான ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.இந்த போராட்டமானது எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டம் மாத்திரம் அல்ல மாணவர்களது இன்று மாணவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி இருக்கின்றார்கள் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை இடை விலகல்களும் அதிகரித்து இருக்கின்றது.எனவே அவர்களுடைய எரிபொருள் பிரச்சனை அதாவது பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் பெரும்பாலான மாணவர்களுக்கு புத்தக பைகள் பாதனிகள் போன்றவைகளை பெறுவதற்குரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.இந்த போராட்டம் என்பது பெற்றோர்களும் எம்முடன் இணைந்து இருக்கின்றனர் இது தனிப்பட்ட ரீதியான கல்வியை பாதிப்பது நோக்கம் அல்ல அடுத்தது நாங்கள் இந்த போராட்டத்தை ஆரம்பிக்க போகின்றோம் எனக் கூறி சகல வகையிலும் பல தடவை கல்வி அமைச்சுடனும் ஜனாதிபதியுடன் நிதி அமைச்சருடனும் பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தோம் பல தடவைகள் நாங்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம்.பல தடவைகள் எங்களது கோரிக்கைகளை செவி சாய்க்காத காரணத்தினால் தான் நாம் இன்று பெற்றோர்களையும் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம் இதில் எந்த விதத்திலும் கல்வி பாதிப்படைவதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல இதற்கான முழு பொறுப்பையும் ரணில் ராஜபக்ஷா அரசாங்கமே என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement