• Sep 20 2024

அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு உடையில் கற்பித்த ஆசிரியர்கள்!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 12:03 pm
image

Advertisement

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில்  இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்தல் என தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ஆசிரியர்கள், அதிபர்கள்  கறுப்பு உடை அணிந்தும் மற்றும் கறுப்பு பட்டி அணிந்தும்   பெரும்பாலான பாடசாலைகளுக்கு இன்று சமூகமளித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டம் இந்த வருடம் வழங்கப்படாமை, நிலுவை சம்பளத்துக்கு வரி அறவிடல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து  ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த  கறுப்பு வார போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் கட்டானை கல்விக் கோட்டத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர்கள்  கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளித்தனர். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாடசாலை வாயிலில் கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றது.



அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு உடையில் கற்பித்த ஆசிரியர்கள்SamugamMedia அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில்  இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்தல் என தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதேவேளை, ஆசிரியர்கள், அதிபர்கள்  கறுப்பு உடை அணிந்தும் மற்றும் கறுப்பு பட்டி அணிந்தும்   பெரும்பாலான பாடசாலைகளுக்கு இன்று சமூகமளித்துள்ளனர்.சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டம் இந்த வருடம் வழங்கப்படாமை, நிலுவை சம்பளத்துக்கு வரி அறவிடல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து  ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த  கறுப்பு வார போராட்டத்தில் குதித்துள்ளனர்.நீர்கொழும்பு கல்வி வலயத்தில் கட்டானை கல்விக் கோட்டத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர்கள்  கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளித்தனர். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாடசாலை வாயிலில் கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.இதேவேளை பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement