• Sep 20 2024

கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக்பந்து, விளையாட்டு அறிமுகம்!

Tamil nila / Jan 12th 2023, 7:27 pm
image

Advertisement

உலகளாவியிய ரீதியில், பிரபலமாகிவரும் டெக்பந்து விளையாட்டு ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் உதவியுடன் பாடசாலை மட்டங்களில் அறிமுகமாகின்றது.


அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பாடசாலையாக கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக் பந்து விளையாட்டினை இன்றைய தினம் (12/01/2023) இலங்கை டெக்பந்து சம்மேளனம் ஜனனம் அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்தது...




ரூபாய்  10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய டெக் பந்து விளையாட்டுக்கான பிரத்தியேக மேசைகள் மற்றும் உபகரணங்களை  ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியினால் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபர் செல்வி தெ. தேவசியானி அவர்களுக்கு பாடசாலை மண்டபத்தில் வைத்து பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் முன்னிலையில் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது...



இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் தனது உரையில் மாணவர்களின் உடல் உள நிலை வளர்ச்சியில் மிகப்பிரதான பங்கினை வகிப்பது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளாகும் என்று குறிப்பிட்டார்...


மேலும் அவர் பேசுகையில், பாடாசாலை மட்டங்களில் அறிமுகமாகும் விளையாட்டுகள் மாணவர்களை வளப்படுத்துவதுடன் அவர்களை தவறான பாதைகளை நோக்கி நகர்வதை தடுக்கும் ஒரு பிரதான காரணியாகும்.



இன்று நாட்டில் உள்ள சூழ்நிலைகளில் மாணவர்களை நல் வழிப்படுத்துவதற்கு புதிய விளையாட்டுகளை பாடசாலை மட்டங்களில் அறிமுகப்படுத்துவது அவசியமாகின்றது.


இதனூடாக விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


அவர்கள் தங்களுடைய பொழுதுபோக்கு நேரத்தினை வீண்டிப்பதை தவிர்த்து அதனை இவ்வாறான புதிய விளையாட்டு நிகழ்வுகளில் பயன்படுத்துவார்கள். இது சமூக முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.


கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை டெக் போல் சம்மேளனத்தின் தலைவர் காமினி ஜெயசிங்க, ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோ மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் சார்பாக அதன் திட்டமிடல் இணைப்பாளர் ஏ.டி. முரளி மற்றும் மயூரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது...


கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக்பந்து, விளையாட்டு அறிமுகம் உலகளாவியிய ரீதியில், பிரபலமாகிவரும் டெக்பந்து விளையாட்டு ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் உதவியுடன் பாடசாலை மட்டங்களில் அறிமுகமாகின்றது.அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பாடசாலையாக கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக் பந்து விளையாட்டினை இன்றைய தினம் (12/01/2023) இலங்கை டெக்பந்து சம்மேளனம் ஜனனம் அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்தது.ரூபாய்  10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய டெக் பந்து விளையாட்டுக்கான பிரத்தியேக மேசைகள் மற்றும் உபகரணங்களை  ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியினால் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபர் செல்வி தெ. தேவசியானி அவர்களுக்கு பாடசாலை மண்டபத்தில் வைத்து பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் முன்னிலையில் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் தனது உரையில் மாணவர்களின் உடல் உள நிலை வளர்ச்சியில் மிகப்பிரதான பங்கினை வகிப்பது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளாகும் என்று குறிப்பிட்டார்.மேலும் அவர் பேசுகையில், பாடாசாலை மட்டங்களில் அறிமுகமாகும் விளையாட்டுகள் மாணவர்களை வளப்படுத்துவதுடன் அவர்களை தவறான பாதைகளை நோக்கி நகர்வதை தடுக்கும் ஒரு பிரதான காரணியாகும்.இன்று நாட்டில் உள்ள சூழ்நிலைகளில் மாணவர்களை நல் வழிப்படுத்துவதற்கு புதிய விளையாட்டுகளை பாடசாலை மட்டங்களில் அறிமுகப்படுத்துவது அவசியமாகின்றது.இதனூடாக விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அவர்கள் தங்களுடைய பொழுதுபோக்கு நேரத்தினை வீண்டிப்பதை தவிர்த்து அதனை இவ்வாறான புதிய விளையாட்டு நிகழ்வுகளில் பயன்படுத்துவார்கள். இது சமூக முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை டெக் போல் சம்மேளனத்தின் தலைவர் காமினி ஜெயசிங்க, ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோ மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் சார்பாக அதன் திட்டமிடல் இணைப்பாளர் ஏ.டி. முரளி மற்றும் மயூரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement