• May 18 2024

நுவரெலியாவில், கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி!

Tamil nila / Jan 12th 2023, 7:44 pm
image

Advertisement

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.


 

இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12.01.2023) செலுத்தப்பட்டது.


 

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரண மைத்திரி குணரத்ன,

 

" நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும். எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால் தான் அனைத்து இன மக்களும் எம்மிடம் இணைந்து போட்டியிடுகின்றனர்.



 

மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர். எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.


 

அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. " - என்றார்.

நுவரெலியாவில், கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது. இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12.01.2023) செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரண மைத்திரி குணரத்ன, " நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும். எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால் தான் அனைத்து இன மக்களும் எம்மிடம் இணைந்து போட்டியிடுகின்றனர். மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர். எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. " - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement