• Sep 17 2024

இலங்கையில் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை.!! கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!

Tamil nila / May 18th 2024, 7:38 am
image

Advertisement

இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள  கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு காற்றும் மழையுடனான வானிலையும்  அதிகரித்துக் காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல்,கிழக்கு  மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை சூழஉள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

இன்று மாலைமுதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

குறிப்பாக கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்  என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது





இலங்கையில் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை. கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை. இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள  கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு காற்றும் மழையுடனான வானிலையும்  அதிகரித்துக் காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல்,கிழக்கு  மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டை சூழஉள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.இன்று மாலைமுதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.குறிப்பாக கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்  என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement