• Nov 22 2024

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு...! சர்வதேச மன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து...!

Sharmi / May 18th 2024, 8:36 am
image

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட்டிடம் (Agnès Callamard)  வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamardற்கும் வடகிழக்கின் எட்டுமாவட்டங்களைச் சேர்ந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றையதினம்(17) முல்லைத்தீவிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற  சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் உள்நாட்டு ஆணைக்குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச நீதிபதிகளின் கண்காணிப்பில், கலப்புநீதிமன்ற பொறிமுறையில் உள்ளக விசாரணைமூலம் நீதியைப் பெற்றுத்தருவது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் யோசனையொன்றை முன்வைத்ததாகவும், இருப்பினும் தாம் அதை மறுத்ததுடன், சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு தற்போது தமக்கு புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள், தமது போராட்டத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தற்போது தமிழர்பகுதிகளில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாதிப்பு நிலை தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.




காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு. சர்வதேச மன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட்டிடம் (Agnès Callamard)  வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamardற்கும் வடகிழக்கின் எட்டுமாவட்டங்களைச் சேர்ந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றையதினம்(17) முல்லைத்தீவிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற  சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.குறித்த சந்திப்பின் பின்னர் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் உள்நாட்டு ஆணைக்குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச நீதிபதிகளின் கண்காணிப்பில், கலப்புநீதிமன்ற பொறிமுறையில் உள்ளக விசாரணைமூலம் நீதியைப் பெற்றுத்தருவது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் யோசனையொன்றை முன்வைத்ததாகவும், இருப்பினும் தாம் அதை மறுத்ததுடன், சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.அத்தோடு தற்போது தமக்கு புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள், தமது போராட்டத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.அதேவேளை தற்போது தமிழர்பகுதிகளில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாதிப்பு நிலை தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement