‘மே 18-ஆம் தேதி என்பது இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு, வாா்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான தமிழா்களை நினைவுகூரும் நாளாகும்’
அந்தவகையில், இலங்கை முள்ளிவாய்க்கால் 15ஆவது நினைவு தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்துடன் கூடிய தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பன ஒரு வரமாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி..வழங்கும் நிகழ்வு,,சுண்டிகுளம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,,சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ,உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி நிகழ்வு என தமிழர் தாயகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 15ம் ஆண்டு இன அழிப்பு நினைவு நாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தேசம் எங்கும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழர் வரலாற்றில் வலிசுமந்து இன்றுடன் 15ம் ஆண்டுகள். ‘மே 18-ஆம் தேதி என்பது இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு, வாா்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான தமிழா்களை நினைவுகூரும் நாளாகும்’அந்தவகையில், இலங்கை முள்ளிவாய்க்கால் 15ஆவது நினைவு தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்துடன் கூடிய தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் என்பன ஒரு வரமாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி.வழங்கும் நிகழ்வு,,சுண்டிகுளம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,,சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு,மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ,உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி நிகழ்வு என தமிழர் தாயகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் இன்று நடைபெறும் 15ம் ஆண்டு இன அழிப்பு நினைவு நாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.இதற்கமைய முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தேசம் எங்கும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.