• Nov 23 2024

இலங்கையில் டைபாய்டு பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம்- சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை..!!

Tamil nila / May 18th 2024, 6:43 am
image

இலங்கையில் டைபாய்டு எனும் பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறெனில் மலக் கழிவுகளால்டைபாய்டு பாக்டீரியா உருவாகும் அதேவேளை, பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது.

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்களை இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அத்துடன் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயமுள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு, இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

குறிப்பாக டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் அதற்கான தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் டைபாய்டு பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம்- சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை. இலங்கையில் டைபாய்டு எனும் பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.எவ்வாறெனில் மலக் கழிவுகளால்டைபாய்டு பாக்டீரியா உருவாகும் அதேவேளை, பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது.வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்களை இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.அத்துடன் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயமுள்ளது.இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு, இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.குறிப்பாக டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் அதற்கான தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement