• May 09 2024

தொழில்நுட்ப கோளாறு – TIN திட்டதுக்கு வந்த சோதனை...Samugammedia

Tharun / Jan 12th 2024, 6:42 pm
image

Advertisement

தொழில்நுட்ப கோளாறு காரணமாக TIN திட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதம் வரை இத்திட்டமானது  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று ஊழியர்களுக்கு வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (11) தெரிவித்தார்.

மேலும், நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும் போதும், புதுப்பிக்கும் போதும் அடுத்த மாதம் 1ம் திகதிக்குள் TIN வழங்க வேண்டும் என்ற கட்டாய முடிவு ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவில் இல்லாததால் இதற்கான கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்தத் தகுதியுடையவர்கள். இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வரி அடையாள எண்ணைப் பெற வேண்டும். ஆனால் அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை என்று அர்த்தமல்ல.

ஏப்ரல் மாதம் முதல் நடப்புக் கணக்கு தொடங்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி கோரும் போதும், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல், நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும் வரி அடையாள எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப கோளாறு – TIN திட்டதுக்கு வந்த சோதனை.Samugammedia தொழில்நுட்ப கோளாறு காரணமாக TIN திட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதம் வரை இத்திட்டமானது  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று ஊழியர்களுக்கு வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (11) தெரிவித்தார்.மேலும், நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும் போதும், புதுப்பிக்கும் போதும் அடுத்த மாதம் 1ம் திகதிக்குள் TIN வழங்க வேண்டும் என்ற கட்டாய முடிவு ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவில் இல்லாததால் இதற்கான கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்தத் தகுதியுடையவர்கள். இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வரி அடையாள எண்ணைப் பெற வேண்டும். ஆனால் அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை என்று அர்த்தமல்ல.ஏப்ரல் மாதம் முதல் நடப்புக் கணக்கு தொடங்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி கோரும் போதும், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல், நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும் வரி அடையாள எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement