வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலையானது 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த பகுதிகளில் 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெப்பநிலையானது 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.