• Apr 07 2025

உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு இடைக்கால தடை!

Thansita / Apr 7th 2025, 6:08 pm
image

கொழும்பு மாநகரசபை உற்பட  பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையிலே இந்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய முடியும் எனவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு இடைக்கால தடை கொழும்பு மாநகரசபை உற்பட  பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதுஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையிலே இந்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய முடியும் எனவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement