• Apr 07 2025

கோசல நுவன் ஜெயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல்

Thansita / Apr 7th 2025, 5:07 pm
image

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கின்றது. .என  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றார்

வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு துடிப்புடன் செயற்பட்டார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் ஈடேறும். சக தோழர்களாக நாம் உழைப்போம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  அனுதாப செய்தி விடுத்துள்ளார். அதில்

'ஒரு துடிப்புள்ள இளம் தலைவரின் மரணம் மனதை சுக்குநூறாக்குகின்றது. ஒரு செழிப்பான நாட்டுக்காக அவர் துடிப்புடன் செயற்பட்டார். எம்முடன் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வார். சிறந்த தூரநோக்கு திட்டங்கள் அவரிடம் இருந்தன.

கேகாலை மாவட்டத்தில் வாழும் எமது மலையக சொந்தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி என்னுடன் கலந்துரையாடுவார். பிரச்சினைகளை எனது கவனத்திற்கு கொண்டுவருவார். இப்படியான உன்னதமான தோழரின் மறைவு பேரிழப்பாகும்.

அவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தார்இ ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா இறைப்பாறட்டும். எதற்காக அவர் அரசியல் களம் வந்தாரோ, அந்த நோக்கத்தை சக தோழர்களாக நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.' - என்றுள்ளது.


 

கோசல நுவன் ஜெயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல் தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கின்றது. .என  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றார்வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு துடிப்புடன் செயற்பட்டார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் ஈடேறும். சக தோழர்களாக நாம் உழைப்போம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர்  அனுதாப செய்தி விடுத்துள்ளார். அதில்'ஒரு துடிப்புள்ள இளம் தலைவரின் மரணம் மனதை சுக்குநூறாக்குகின்றது. ஒரு செழிப்பான நாட்டுக்காக அவர் துடிப்புடன் செயற்பட்டார். எம்முடன் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வார். சிறந்த தூரநோக்கு திட்டங்கள் அவரிடம் இருந்தன.கேகாலை மாவட்டத்தில் வாழும் எமது மலையக சொந்தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி என்னுடன் கலந்துரையாடுவார். பிரச்சினைகளை எனது கவனத்திற்கு கொண்டுவருவார். இப்படியான உன்னதமான தோழரின் மறைவு பேரிழப்பாகும்.அவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தார்இ ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா இறைப்பாறட்டும். எதற்காக அவர் அரசியல் களம் வந்தாரோ, அந்த நோக்கத்தை சக தோழர்களாக நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.' - என்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement