மேல் மாகாணத்தில் வருடாந்த சுகாதார இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோளுக்கு இணங்க, மேல்மாகாண ஆளுநர் எயர்வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி மேல்மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (18) நகர அபிவிருத்தி அமைச்சின் பொது மக்கள் தினத்திற்கு வந்து தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 300 மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சரைச் சந்திக்க வந்தனர்.
முறைசாரா முறையில் இந்த வருடாந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்போது, மேல்மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுடன் மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநரை சந்தித்தார்.
இதன்போது உண்மைகளை விளக்கிய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், இந்த வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
சில சுகாதார தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சுகாதார சேவையை சீர்குலைத்து அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கு சில சுகாதார சங்கங்கள் செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்தார்.
பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்து முறைப்படி நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்து வருடாந்த இடமாற்றங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன் பின்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண சபையின் தரைத்தளத்தில் உள்ள சுகாதார ஊழியர்களிடம் வந்து சில சுகாதார சங்கங்கள் சுகாதார சேவையை சீர்குலைக்க சதி செய்வதால் குறிப்பிட்ட சில சுகாதார சங்கங்கள் மீது வீழ்ந்து விட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தை சங்கடப்படுத்தவே அவர்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்த சுகாதார இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம். அமைச்சர் பிரசன்ன நடவடிக்கை. மேல் மாகாணத்தில் வருடாந்த சுகாதார இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோளுக்கு இணங்க, மேல்மாகாண ஆளுநர் எயர்வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி மேல்மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (18) நகர அபிவிருத்தி அமைச்சின் பொது மக்கள் தினத்திற்கு வந்து தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 300 மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சரைச் சந்திக்க வந்தனர்.முறைசாரா முறையில் இந்த வருடாந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்போது, மேல்மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுடன் மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநரை சந்தித்தார்.இதன்போது உண்மைகளை விளக்கிய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், இந்த வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். சில சுகாதார தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஊழியர்கள் தெரிவித்தனர். நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சுகாதார சேவையை சீர்குலைத்து அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கு சில சுகாதார சங்கங்கள் செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்தார்.பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்து முறைப்படி நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்து வருடாந்த இடமாற்றங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.அதன் பின்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண சபையின் தரைத்தளத்தில் உள்ள சுகாதார ஊழியர்களிடம் வந்து சில சுகாதார சங்கங்கள் சுகாதார சேவையை சீர்குலைக்க சதி செய்வதால் குறிப்பிட்ட சில சுகாதார சங்கங்கள் மீது வீழ்ந்து விட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தை சங்கடப்படுத்தவே அவர்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.