வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் உட்பட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல் தொடர்பில் 34 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இவ்வாறான பின்னணியில் நேற்று காலை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 16 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய சிலர் பொலன்னறுவை சோமாவதிய விகாரை வளாகத்தில் தங்கியிருந்த ஒருவரை தாக்கி பணம் மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், தப்பியோடிய குழுவினர் சோமாவதியா விகாரைக்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிக்குள் புகுந்து அங்குள்ள பேருந்து ஒன்றையும் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தில் முன்னதாக இரண்டு தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் பதற்றம் - இராணுவ சிப்பாய் உட்பட 11 பேர் காயம். வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் உட்பட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த மோதல் தொடர்பில் 34 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும், மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.இவ்வாறான பின்னணியில் நேற்று காலை வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 16 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.தப்பியோடிய சிலர் பொலன்னறுவை சோமாவதிய விகாரை வளாகத்தில் தங்கியிருந்த ஒருவரை தாக்கி பணம் மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.அத்துடன், தப்பியோடிய குழுவினர் சோமாவதியா விகாரைக்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிக்குள் புகுந்து அங்குள்ள பேருந்து ஒன்றையும் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த வருடத்தில் முன்னதாக இரண்டு தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.