நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 8 பிரதிநிதிகளுக்கு சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அது தோல்வியடைந்ததால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்த நிலையில்,
மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள வைத்தியசாலை சதுக்கும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அதனை அண்மித்துள்ள வைத்தியசாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டீன்ஸ் வீதி, சேரம் வீதி, ரிஜன்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் ஒன்றுகூடுவதற்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த தடை இன்று மாலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சுக்கு முன் பதற்றம்; ஆர்ப்பாட்டத்தில் குதித்த 27 மாணவர்கள் கைது நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர். அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது 8 பிரதிநிதிகளுக்கு சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அது தோல்வியடைந்ததால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்த நிலையில், மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள வைத்தியசாலை சதுக்கும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அதனை அண்மித்துள்ள வைத்தியசாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டீன்ஸ் வீதி, சேரம் வீதி, ரிஜன்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் ஒன்றுகூடுவதற்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.அந்த தடை இன்று மாலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.