• Oct 19 2024

யாழில் பதற்றம்..! பாடசாலை மாணவியை கடத்த முயற்சி..! மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு samugammedia

Chithra / May 16th 2023, 9:38 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த வாரம் மன்னார் கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவரை நீண்ட நேரமாக ஒருவர் அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


யாழில் பதற்றம். பாடசாலை மாணவியை கடத்த முயற்சி. மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு samugammedia யாழ்ப்பாணம் - ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக கடந்த வாரம் மன்னார் கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவரை நீண்ட நேரமாக ஒருவர் அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement