• Oct 30 2024

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை; இலங்கையில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு!

Chithra / Oct 29th 2024, 8:56 am
image

Advertisement

 

சந்தையில் காணப்படும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கான தடுப்பட்டு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அளவுகளை சுமந்து வந்த கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை; இலங்கையில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு  சந்தையில் காணப்படும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கான தடுப்பட்டு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அளவுகளை சுமந்து வந்த கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement