• May 17 2026

வவுனியாவில் கோர விபத்து; ஜேர்மன் நாட்டு பிரஜை சம்பவ இடத்திலேயே பலியான சோகம்

Chithra / Sep 19th 2025, 2:28 pm
image

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த பாரவூர்தி வவுனியா கனகரயான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.


விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகைதந்து கனகயாரன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கோர விபத்து; ஜேர்மன் நாட்டு பிரஜை சம்பவ இடத்திலேயே பலியான சோகம் வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த பாரவூர்தி வவுனியா கனகரயான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகைதந்து கனகயாரன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement