• Nov 24 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்! ஒருவர் உயிரிழப்பு - இருவர் வைத்தியசாலையில்!

Chithra / Feb 26th 2024, 2:24 pm
image

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையிலான பகுதியில் இரு லொாறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழம (26) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

ரத்கம பிரதேசத்தில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்வனவு செய்யவதற்காக பயணித்த லொாறி ஒன்று, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து குருணாகல் பிரதேசத்திற்கு சீமெந்து ஏற்றி கொழும்பு பிரதேசத்தை நோக்கி பயணித்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கலனிகம போக்குவரத்து பிரிவு, தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் பிரிவின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 20 நிமிட நடவடிக்கைக்கு பின் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி 3 பேரையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் சிறிய ரக லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரத்கம பகுதியைச் சேர்ந்த கமல் சொய்சா என்ற 55 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம் ஒருவர் உயிரிழப்பு - இருவர் வைத்தியசாலையில்  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையிலான பகுதியில் இரு லொாறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று திங்கட்கிழம (26) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரத்கம பிரதேசத்தில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்வனவு செய்யவதற்காக பயணித்த லொாறி ஒன்று, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து குருணாகல் பிரதேசத்திற்கு சீமெந்து ஏற்றி கொழும்பு பிரதேசத்தை நோக்கி பயணித்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கலனிகம போக்குவரத்து பிரிவு, தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் பிரிவின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 20 நிமிட நடவடிக்கைக்கு பின் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி 3 பேரையும் மீட்டுள்ளனர்.இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.விபத்தில் சிறிய ரக லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரத்கம பகுதியைச் சேர்ந்த கமல் சொய்சா என்ற 55 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement