• Sep 20 2024

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள தீவிரவாதம்! இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 2:57 pm
image

Advertisement

கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட உலக நாடுகளுக்கு தற்போது தீவிரவாதமும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெறும் நிலையில், தொலைக்காணொளி மூலமாக உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றால் மூன்று வருடங்களாக எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்கள் போன்றவற்றினால் உலக நாடுகள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளன.


இவ்வாறான நிலையில் உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், தீவிரவாதத்தை உலக நாடுகள் எதிர்க்கும் என இந்தியா நம்பும் அதேவேளை, இதனை ஆதரிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள தீவிரவாதம் இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட உலக நாடுகளுக்கு தற்போது தீவிரவாதமும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெறும் நிலையில், தொலைக்காணொளி மூலமாக உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.கொரோனா தொற்றால் மூன்று வருடங்களாக எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்கள் போன்றவற்றினால் உலக நாடுகள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளன.இவ்வாறான நிலையில் உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், தீவிரவாதத்தை உலக நாடுகள் எதிர்க்கும் என இந்தியா நம்பும் அதேவேளை, இதனை ஆதரிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement