• Sep 17 2024

தங்கையோ கல்யாண ஊர்வலத்தில்: தமக்கையோ இறுதி ஊர்வலம்- ஒரே வீட்டில் ஒலித்த மங்கல அமங்கல இசை!SamugamMedia

Sharmi / Mar 2nd 2023, 3:00 pm
image

Advertisement

 
திருமண சடங்குகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டிருக்கும் போது மணமகள் இருந்தமையால், குடும்பத்தினர் அதிரடியாக முடிவெடுத்து அவரது தங்கையினை மணம் முடித்து வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.

எதிர்பாராத துன்பம் தாக்கிய பொழுதும் குடும்பத்தார் தயங்காமல்  துணிச்சலுடன் முடிவெடுத்ததாக அந்த பகுதி மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

பாவாணகரிலுள்ள சுபாஷ் நகரினை சேர்ந்த ஹெத்தல் றதோல்ட் என்ற பெண்ணிற்கும், விஷால் அலோக்தார் என்ற ஆணிற்கும் பிப்ரவரி 24 ஆம் திகதி திருமணம் நடத்த பெரியோர்கள் நிச்சயித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணத்தன்று குடும்ப உறுப்பினர்கள் திருமண ஏற்பாட்டில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.

தீடிரென மணமகள் மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தமையால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாகவும் கடுமையான மாரடைப்பினாலுமே  இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ள போது திருமண ஊர்வலம் நிகழிடத்தினை அடைந்துள்ளது. உறவினர்கள்  மற்றும் குடும்ப பெரியர்களுடனும் ஆலோசனை நடத்திய குடும்பத்தினர் ஹெத்தலின் தங்கையினை  விஷாலுக்கு மணம் முடிப்பதாக தீர்மானித்துள்ளனர்.

அதனால், இறந்த தமக்கையின் உடலினை மருத்துவமனை குளிர்ப்பதான பிணவறையில் வைத்து விட்டு அருகிலிருந்த சிவன் கோயிலொன்றில்  ஹெத்தலின் தங்கைக்கும் விஷாலுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு சென்றதன் பின்னர் அடுத்த நாள் ஹெத்தலின் இறுதி சடங்கினை நடத்தி முடித்துள்ளனர் குடும்பத்தினர். துன்பமும் இன்பமும் கலந்த இச் சம்பவத்தால் அந்த குடும்பத்தினர் பேச வார்த்தைகளின்றி பெரும் சோகத்தில் தவித்துள்ளனர்.



தங்கையோ கல்யாண ஊர்வலத்தில்: தமக்கையோ இறுதி ஊர்வலம்- ஒரே வீட்டில் ஒலித்த மங்கல அமங்கல இசைSamugamMedia  திருமண சடங்குகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டிருக்கும் போது மணமகள் இருந்தமையால், குடும்பத்தினர் அதிரடியாக முடிவெடுத்து அவரது தங்கையினை மணம் முடித்து வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது. எதிர்பாராத துன்பம் தாக்கிய பொழுதும் குடும்பத்தார் தயங்காமல்  துணிச்சலுடன் முடிவெடுத்ததாக அந்த பகுதி மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர். பாவாணகரிலுள்ள சுபாஷ் நகரினை சேர்ந்த ஹெத்தல் றதோல்ட் என்ற பெண்ணிற்கும், விஷால் அலோக்தார் என்ற ஆணிற்கும் பிப்ரவரி 24 ஆம் திகதி திருமணம் நடத்த பெரியோர்கள் நிச்சயித்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்தன்று குடும்ப உறுப்பினர்கள் திருமண ஏற்பாட்டில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர். தீடிரென மணமகள் மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தமையால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாகவும் கடுமையான மாரடைப்பினாலுமே  இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ள போது திருமண ஊர்வலம் நிகழிடத்தினை அடைந்துள்ளது. உறவினர்கள்  மற்றும் குடும்ப பெரியர்களுடனும் ஆலோசனை நடத்திய குடும்பத்தினர் ஹெத்தலின் தங்கையினை  விஷாலுக்கு மணம் முடிப்பதாக தீர்மானித்துள்ளனர்.அதனால், இறந்த தமக்கையின் உடலினை மருத்துவமனை குளிர்ப்பதான பிணவறையில் வைத்து விட்டு அருகிலிருந்த சிவன் கோயிலொன்றில்  ஹெத்தலின் தங்கைக்கும் விஷாலுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்து மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு சென்றதன் பின்னர் அடுத்த நாள் ஹெத்தலின் இறுதி சடங்கினை நடத்தி முடித்துள்ளனர் குடும்பத்தினர். துன்பமும் இன்பமும் கலந்த இச் சம்பவத்தால் அந்த குடும்பத்தினர் பேச வார்த்தைகளின்றி பெரும் சோகத்தில் தவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement