இலங்கை தேசிய விஞ்ஞான மன்றமும், நிரல் கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர் மத்தியில் விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் முகமாகப் பல்வேறு போட்டிகளை நடாத்தி அதில் சிறப்பிடம் பெற்ற மாணவர் கடந்த சில ஆண்டுகளாகத் தேசிய ரீதியில் கௌரவித்து வருகிறது.
இவ் வருடத்திற்கான கௌரவிப்பு விழா கடந்த 30ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கலையரங்கில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந் கலந்தும் சிறப்பித்திருந்தார்.
தரம்-6 மாணவரிடையே தேசிய ரீதியில் 10 சிறார்கள் மழலை இயற்கை ஆர்வலராகத் தெரிவாகினர். இப் பத்து மாணவரில் ஒருவராக தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மயூரன் அஜேராவ் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் சிறந்த முறையில் சூழலை அவதானித்து இயற்கை நாட்குறிப் பேட்டை தயாரித்து தேசிய விஞ்ஞான மன்றத்திற்கு சமர்ப்பித்து இவ் சிறப்பினைப் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறாக தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தேசிய ரீதியில் 10 மாணவர்கள் தெரிவாகினர்.
தேசிய ரீதியில் மொத்தமாக 60 மாணவர்கள் இவ்வாண்டிற்கான மழலை இயற்கை ஆர்வலர்களாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மழலை இயற்கை ஆர்வலனாக தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தெரிவு. இலங்கை தேசிய விஞ்ஞான மன்றமும், நிரல் கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர் மத்தியில் விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் முகமாகப் பல்வேறு போட்டிகளை நடாத்தி அதில் சிறப்பிடம் பெற்ற மாணவர் கடந்த சில ஆண்டுகளாகத் தேசிய ரீதியில் கௌரவித்து வருகிறது.இவ் வருடத்திற்கான கௌரவிப்பு விழா கடந்த 30ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கலையரங்கில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந் கலந்தும் சிறப்பித்திருந்தார்.தரம்-6 மாணவரிடையே தேசிய ரீதியில் 10 சிறார்கள் மழலை இயற்கை ஆர்வலராகத் தெரிவாகினர். இப் பத்து மாணவரில் ஒருவராக தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மயூரன் அஜேராவ் தெரிவு செய்யப்பட்டார்.இவர் சிறந்த முறையில் சூழலை அவதானித்து இயற்கை நாட்குறிப் பேட்டை தயாரித்து தேசிய விஞ்ஞான மன்றத்திற்கு சமர்ப்பித்து இவ் சிறப்பினைப் பெற்றுக் கொண்டார்.இவ்வாறாக தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தேசிய ரீதியில் 10 மாணவர்கள் தெரிவாகினர். தேசிய ரீதியில் மொத்தமாக 60 மாணவர்கள் இவ்வாண்டிற்கான மழலை இயற்கை ஆர்வலர்களாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.