தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடக விளங்கி வருகின்ற பிரேசிலை கடந்த ஏழு நாட்களாக கனமழை புரட்டிப்போட்டு வருகிறது . அசாதாரணமான இத்தகைய தொடர் மழை காரணமாக பிரேசில் நாடே தற்போது வெள்ளக்காடாக மூழ்கி கிடக்கின்றது .
குறிப்பாக பிரேசிலின் தெற்கு நகரமாக விளங்கும் ரியோ நகரில் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும் . நாட்டில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய துயரசம்பவமாக இந்த அனர்த்தம் இருகின்றது .
கடந்த 7 நாட்களில் மாத்திரம் 75 இற்கு மேற்பட்டவர்கள் இந்த பேரனர்த்ததால் உயிரிழந்து இருக்கின்றார்கள் .மேலும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள் .அவர்களின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை .
160 மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள் . வீடுகள் உறைவிடங்களை காலி செய்து விட்டு சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கின்றார்கள் . இருப்பினும் பள்ளி அரங்கம் மற்றும் அவரசகல தங்குமிடங்களில் வெறும் 16 ஆயிரம் மக்களே தஞ்சம் புகுந்துள்ளனர் . எஞ்சிய மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்க்கும்பணியில் இராணுவம் ஈடுபட்டு வந்தாலும் ஏனையவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து அரசாங்கம் பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது
பிரேசில் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் குளங்கள் என அனைத்தும் வெள்ளத்தால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது .பிரேசிலின் வரலாற்று சிறப்புமிக்க இரட்டை பாலம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு வெள்ளத்தால் மூடிப்போயுள்ளது .
அளவு கடந்த வெள்ளம் காரணமாக மலைகள் எல்லாம் அப்படியே சரிந்து விழுகின்றன . தண்ணீருக்குள் தத்தளிக்கும் அப்பாவி மக்களும் அந்த மண்ணோடு மண்ணாகவே புதையுண்டு செல்கின்றனர் .
8 இலட்சம் மக்கள் உண்ண உணவு மற்றும் குடிக்க நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் .படகுகள் மூலம் தப்பி பிழைத்து வெளியேற நினைக்கும் மக்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கின்றனர் .
இதற்கெல்லாம் என்ன காரணம் , திடீரென நடக்கும் இத்தகைய இயற்கையின் சீற்றங்களுக்கு ஏன் நாங்கள் ஆளாகின்றோம் என நாம் சிந்தித்து பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் நாம் தான் என்கின்ற நிதர்சனம் வெளிவரும் .
el nino . இந்த பெயர் நாம் சமீபகாலமாக கேள்விப்பட்டுவரும் பெயர் ஒன்று தான் . இயற்கையின் சீரங்களுக்கு காரணமும் இந்த elnino மாற்றம் தான் . அதனால் என்ன தாக்கம் வரப்போகின்றது , 3 அல்லது 5 வருடத்திற்கொருமுறை ஏற்படும் இந்த விளைவால் என்ன நடக்கபோகின்றது என்றதொரு அலட்சியம் தான் இன்று வானிலையையே மனித வர்க்கதிற்க்கெதிராக திருப்பி போட்டுள்ளது .
இவை அனைத்தும் மனிதன் நிகழ்த்திய தவறுகள் தான் . மனிதனின் அலட்சியங்கள் தான் . அவை தான் இன்று நமது உயிரையும் பறித்து செல்கின்றது . அதனுடைய விளைவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனர்த்தங்களையும் பார்க்கும்போது தான் நாம் செய்த தவறுகள் நம் முன்னே தோன்றி நிற்கின்றது.
வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்- உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு. தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடக விளங்கி வருகின்ற பிரேசிலை கடந்த ஏழு நாட்களாக கனமழை புரட்டிப்போட்டு வருகிறது . அசாதாரணமான இத்தகைய தொடர் மழை காரணமாக பிரேசில் நாடே தற்போது வெள்ளக்காடாக மூழ்கி கிடக்கின்றது . குறிப்பாக பிரேசிலின் தெற்கு நகரமாக விளங்கும் ரியோ நகரில் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும் . நாட்டில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய துயரசம்பவமாக இந்த அனர்த்தம் இருகின்றது .கடந்த 7 நாட்களில் மாத்திரம் 75 இற்கு மேற்பட்டவர்கள் இந்த பேரனர்த்ததால் உயிரிழந்து இருக்கின்றார்கள் .மேலும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள் .அவர்களின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை .160 மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள் . வீடுகள் உறைவிடங்களை காலி செய்து விட்டு சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கின்றார்கள் . இருப்பினும் பள்ளி அரங்கம் மற்றும் அவரசகல தங்குமிடங்களில் வெறும் 16 ஆயிரம் மக்களே தஞ்சம் புகுந்துள்ளனர் . எஞ்சிய மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்க்கும்பணியில் இராணுவம் ஈடுபட்டு வந்தாலும் ஏனையவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து அரசாங்கம் பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது பிரேசில் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் குளங்கள் என அனைத்தும் வெள்ளத்தால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது .பிரேசிலின் வரலாற்று சிறப்புமிக்க இரட்டை பாலம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு வெள்ளத்தால் மூடிப்போயுள்ளது . அளவு கடந்த வெள்ளம் காரணமாக மலைகள் எல்லாம் அப்படியே சரிந்து விழுகின்றன . தண்ணீருக்குள் தத்தளிக்கும் அப்பாவி மக்களும் அந்த மண்ணோடு மண்ணாகவே புதையுண்டு செல்கின்றனர் . 8 இலட்சம் மக்கள் உண்ண உணவு மற்றும் குடிக்க நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் .படகுகள் மூலம் தப்பி பிழைத்து வெளியேற நினைக்கும் மக்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கின்றனர் . இதற்கெல்லாம் என்ன காரணம் , திடீரென நடக்கும் இத்தகைய இயற்கையின் சீற்றங்களுக்கு ஏன் நாங்கள் ஆளாகின்றோம் என நாம் சிந்தித்து பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் நாம் தான் என்கின்ற நிதர்சனம் வெளிவரும் .el nino . இந்த பெயர் நாம் சமீபகாலமாக கேள்விப்பட்டுவரும் பெயர் ஒன்று தான் . இயற்கையின் சீரங்களுக்கு காரணமும் இந்த elnino மாற்றம் தான் . அதனால் என்ன தாக்கம் வரப்போகின்றது , 3 அல்லது 5 வருடத்திற்கொருமுறை ஏற்படும் இந்த விளைவால் என்ன நடக்கபோகின்றது என்றதொரு அலட்சியம் தான் இன்று வானிலையையே மனித வர்க்கதிற்க்கெதிராக திருப்பி போட்டுள்ளது . இவை அனைத்தும் மனிதன் நிகழ்த்திய தவறுகள் தான் . மனிதனின் அலட்சியங்கள் தான் . அவை தான் இன்று நமது உயிரையும் பறித்து செல்கின்றது . அதனுடைய விளைவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனர்த்தங்களையும் பார்க்கும்போது தான் நாம் செய்த தவறுகள் நம் முன்னே தோன்றி நிற்கின்றது.