• May 17 2026

நாடு முழுவதும் 2026ம் ஆண்டின் அரச கடமைகள் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பம்!

shanu / Jan 1st 2026, 12:09 pm
image

2026ம் ஆண்டின் முதலாவது நாளான இன்று (01.01.2026) நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் சத்தியப்பிரமாணத்துடன் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன. 


மாவட்டச்செயலகங்கள், ஆளுநர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், நகரசபைகள், பிரதேசசபைகள் உள்ளிட்ட அனைத்து அரச அலுவலகங்களிலும் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


அந்தவகையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு  சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்களும் இதன் போது இடம் பெற்றன. 


சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.


மலர்ந்துள்ள 2026 ஆண்டு  புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல்  இன்று 2026.01.01. இடம்பெற்றது.


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) சபையில் ஆரம்பிக்கப்பட்டது.


இது தவிர அனைத்து அரச அலுவலகங்களிலும் சத்தியப்பிரமாணத்துடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



நாடு முழுவதும் 2026ம் ஆண்டின் அரச கடமைகள் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பம் 2026ம் ஆண்டின் முதலாவது நாளான இன்று (01.01.2026) நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் சத்தியப்பிரமாணத்துடன் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன. மாவட்டச்செயலகங்கள், ஆளுநர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், நகரசபைகள், பிரதேசசபைகள் உள்ளிட்ட அனைத்து அரச அலுவலகங்களிலும் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அரச கடமைகளை வைபவ ரீதியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு  சர்வமதத் தலைவர்களின் மத அனுஷ்டானங்களும் இதன் போது இடம் பெற்றன. சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.மலர்ந்துள்ள 2026 ஆண்டு  புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல்  இன்று 2026.01.01. இடம்பெற்றது.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) சபையில் ஆரம்பிக்கப்பட்டது.இது தவிர அனைத்து அரச அலுவலகங்களிலும் சத்தியப்பிரமாணத்துடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement