• Jan 14 2025

முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Oct 11th 2024, 9:02 am
image

ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(10) கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றியதோடு, கண்டாவளைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட, பொருண்மியம் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா மற்றும் பிரதேச மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு. ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(10) கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நினைவுரையாற்றியதோடு, கண்டாவளைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட, பொருண்மியம் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா மற்றும் பிரதேச மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement