“ஒற்றுமையும் ஆற்றலும் ஒன்று கூட உழைப்போம்” எனும் தொனிப்பொருளில், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 28 ஆவது வருட ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கனடாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
குறித்த ஒன்றுகூடலில், சிறுவர்கள் , பெரியவர்களுக்கான பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், காலை உணவு ( தோசை, சாம்பார் சட்ணி, உருழைக்கிழங்குப் பிரட்டல், பருப்புக்கறி, றோஸ் பாண்), மதிய உணவு சொந்த ஊரின் மண்மணம் மாறாத சுவையுடன் கூடிய ஒடியல் கூழ், புரியாணி, வெள்ளைச் சோறு, ஆட்டிறைச்சிகறி, கோழி இறைச்சிக் கறி, மீன் பொரியல், கணவாய் பொரியல், அத்துடன் மிகவும் சுவையான சைவ உணவு, மற்றும் மாலை நேரம் தாராளமாக BBQ, இவற்றுடன் காலை தொடக்கம் மாலை வரை தண்ணீர், யூஸ், பழங்கள் ( watermelon, Cantaloupe) என தாராளமாக ஊரின் உறவுகளின் அனுசரணையுடன் மக்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்கு சங்கத் தலைவர், கு. உதயராசா நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், எங்கள் அனுசரணையாளர்கள் இல்லாமல் இந்த ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடாத்தி இருக்க முடியாது. எங்கள் ஒன்றுகூடல் நிகழ்விற்கு ஆதரவும் அனுசரணையும் தந்து சிறப்பித்த அத்தனை அனுசரணையாளர்கள் (Sponsors ) நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
மேலும் இந்த நிகழ்வுக்கு, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் Volunteers
(என்றும் இல்லாதவாறு இந்த வருடம் நிறைய இளம் தலைமுறையினரும் volunteers ஆக நின்று செய்திருந்தார்கள்) ஆகியோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக, மிக அதிகம்.
மிகவும் நேர்த்தியாகவும், பொறுமை மற்றும் அன்பும் கலந்து சிறப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிகழ்வை நடாத்தி முடித்த இவ்வாண்டின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் எங்களோடு தோளோடு தோள் கொடுத்த அத்தனை எங்கள் ஊரின் உறவுகளுக்கும் என் பணிவான சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அடுத்து எங்கள் ஊரின் கனடா வாழ் உறவுகள். எப்படி சொல்வது புங்குடுதீவு மக்கள், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் என்றாலே எல்லோரையும் ஒருகணம் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் எங்கள் ஊரின் உறவுகள். ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்பவர்கள், ஒன்றுகூடுபவர்கள் புங்குடுதீவு மக்கள் என்பதை மீண்டும் ஒருமுறை எல்லோரையும் திரும்பிப் பார்க்கும் அளவு நேற்றய ஒன்றுகூடலுக்கு சமூகம் அளித்த அத்தனை என் ஊரின் உறவுகளுக்கும் என் சார்பிலும் எங்கள் சங்கத்தின் சார்பிலும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்றி!!
அத்துடன் நேற்றய ஒன்றுகூடல் நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்து மற்ற நாட்டில் உள்ள எங்கள் உறவுகளையும் பார்த்து மகிழ வைத்த எங்கள் சமூகம் Media, மற்றும் Analai Express, அத்துடன் நேற்றய நிகழ்வுகளை நிழல்களாகப் பதிவாக்கிய KN Touch photography மற்றும் ஏனைய ஒளிப்படக் கலைஞர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்திருந்தார்
குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் 1500 மேற்பட்ட மக்களின் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு “ஒற்றுமையும் ஆற்றலும் ஒன்று கூட உழைப்போம்” எனும் தொனிப்பொருளில், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 28 ஆவது வருட ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கனடாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குறித்த ஒன்றுகூடலில், சிறுவர்கள் , பெரியவர்களுக்கான பல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், காலை உணவு ( தோசை, சாம்பார் சட்ணி, உருழைக்கிழங்குப் பிரட்டல், பருப்புக்கறி, றோஸ் பாண்), மதிய உணவு சொந்த ஊரின் மண்மணம் மாறாத சுவையுடன் கூடிய ஒடியல் கூழ், புரியாணி, வெள்ளைச் சோறு, ஆட்டிறைச்சிகறி, கோழி இறைச்சிக் கறி, மீன் பொரியல், கணவாய் பொரியல், அத்துடன் மிகவும் சுவையான சைவ உணவு, மற்றும் மாலை நேரம் தாராளமாக BBQ, இவற்றுடன் காலை தொடக்கம் மாலை வரை தண்ணீர், யூஸ், பழங்கள் ( watermelon, Cantaloupe) என தாராளமாக ஊரின் உறவுகளின் அனுசரணையுடன் மக்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்கு சங்கத் தலைவர், கு. உதயராசா நன்றிகளைத் தெரிவித்திருந்தார். அந்தவகையில், எங்கள் அனுசரணையாளர்கள் இல்லாமல் இந்த ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடாத்தி இருக்க முடியாது. எங்கள் ஒன்றுகூடல் நிகழ்விற்கு ஆதரவும் அனுசரணையும் தந்து சிறப்பித்த அத்தனை அனுசரணையாளர்கள் (Sponsors ) நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிமேலும் இந்த நிகழ்வுக்கு, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் Volunteers (என்றும் இல்லாதவாறு இந்த வருடம் நிறைய இளம் தலைமுறையினரும் volunteers ஆக நின்று செய்திருந்தார்கள்) ஆகியோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக, மிக அதிகம். மிகவும் நேர்த்தியாகவும், பொறுமை மற்றும் அன்பும் கலந்து சிறப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிகழ்வை நடாத்தி முடித்த இவ்வாண்டின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் எங்களோடு தோளோடு தோள் கொடுத்த அத்தனை எங்கள் ஊரின் உறவுகளுக்கும் என் பணிவான சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்து எங்கள் ஊரின் கனடா வாழ் உறவுகள். எப்படி சொல்வது புங்குடுதீவு மக்கள், புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் என்றாலே எல்லோரையும் ஒருகணம் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் எங்கள் ஊரின் உறவுகள். ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்பவர்கள், ஒன்றுகூடுபவர்கள் புங்குடுதீவு மக்கள் என்பதை மீண்டும் ஒருமுறை எல்லோரையும் திரும்பிப் பார்க்கும் அளவு நேற்றய ஒன்றுகூடலுக்கு சமூகம் அளித்த அத்தனை என் ஊரின் உறவுகளுக்கும் என் சார்பிலும் எங்கள் சங்கத்தின் சார்பிலும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்றிஅத்துடன் நேற்றய ஒன்றுகூடல் நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்து மற்ற நாட்டில் உள்ள எங்கள் உறவுகளையும் பார்த்து மகிழ வைத்த எங்கள் சமூகம் Media, மற்றும் Analai Express, அத்துடன் நேற்றய நிகழ்வுகளை நிழல்களாகப் பதிவாக்கிய KN Touch photography மற்றும் ஏனைய ஒளிப்படக் கலைஞர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்திருந்தார் குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் 1500 மேற்பட்ட மக்களின் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.