மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை காட்டுவதாக ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் பாரிய பின்னடைவு சந்தித்து வருகிறது. இது நாட்டு மக்களை பெருமளவு பாதிக்கும் நிலையில் விசேடமாக மலையக மக்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என பாரத் அருள்சாமி அடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாரத் அருள்சாமி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
மலையக மக்களின் காணி உரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமை கோரலும் அவர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பும் ஆகும்.
இதனை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களும் வலியுறுத்தியுள்ளார். பல அரசாங்கங்கள் ஆட்சி பீடம் ஏறிய பொழுது எமது மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளிக்கின்றார்கள்.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மேடைகளில் பல புரட்சிகரமான திட்டங்களை எமது மக்களுக்கு செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் எமது அடிப்படை எதிர்பார்ப்பான காணி உரிமை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் அல்லது பொறுப்பான அமைச்சரின் உறுதி வழங்காத நிலையில் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த காலங்களில் 7 பேர்ச் நிலம் வழங்க வேண்டும் என பல போராட்டங்களுக்கு மத்தியில் அது சாதகமானது. பின்னர் 10 பேர்ச் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பல பிரயதனங்களுக்கு மத்தியில் பல எதிர்ப்புகளை தாண்டி இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்டு வரும் 1700 வீடுகளுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
நான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக கடமையாற்றிய காலப்பகுதியில் இந் நிலங்களை விடுவித்து வழங்க பல எதிர்ப்புக்களையும், சவால்களையும் சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 2020 ஆம் ஆண்டு மக்கள் வாழும் காணிகளுக்கான உறுதி பத்திரத்தை பெற்றுக் கொடுக்க விசேட வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக தற்போது காணி மறுசீர்திருத்த ஆணைக்குழுவினால் எமது மலையாக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உறுதி பத்திரங்களை வழங்க பல சவால்களையும் எதிர்ப்புக்களையும் தாண்டி அதன் இறுதிக்கட்டத்தை அடைய நான் வழி சமைத்து கொடுத்தேன்.
அதன் காரணமாக இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு சட்டப் பூர்வமான காணி உறுதி பத்திரங்கள் எமது சொந்தங்களுக்கு வழங்கப்பட்ட வண்ணம் உள்ளது. இது எனக்கு மட்டற்ற பெருமையை வழங்குகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் மாடி வீடுகளை அமைப்பதற்கான யோசனை முன் வைத்துள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடெங்கிலும் லயன் மற்றும் தற்காலிக குழு வாழும் 170000 க்கும் அதிகமான குடும்பங்கள் பத்து பேர்ச் அடிப்படையில் தனி வீடுகளைப் பெற்றுக் கொள்ள மொத்த பெருந்தோட்ட பகுதிகளில் 1% குறைவான நிலப்பகுதியே தேவைப்படும்.
இது தொடர்பான ஆய்வறிக்கைகள் பல சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு என்பவற்றின் பரிந்துரையோடு நான் தயாரித்திருந்த அறிக்கை கடந்த காலங்களில் என்னால் அரசுக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும் முன்னாள் பிரதமரின் அசம்பந்தமான போக்கின் காரணமாக இத்திட்டத்துக்கான தீர்வு பின்னடைவானது.
எனவே மலையகப் பகுதிகளில் கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்புரிமையையும் மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.
எனவே மக்களின் பெரும் எதிர்பார்ப்பும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அரசாங்கத்திடம் உள்ளது.
மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பான காணி உரிமை விடயத்தில் அரசாங்கம் உரிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், எமது காணி உரிமை விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் ஏற்படின் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறிய அநுர அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவு. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பின்னடைவை காட்டுவதாக ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் பாரிய பின்னடைவு சந்தித்து வருகிறது. இது நாட்டு மக்களை பெருமளவு பாதிக்கும் நிலையில் விசேடமாக மலையக மக்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என பாரத் அருள்சாமி அடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாரத் அருள்சாமி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,மலையக மக்களின் காணி உரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமை கோரலும் அவர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பும் ஆகும். இதனை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களும் வலியுறுத்தியுள்ளார். பல அரசாங்கங்கள் ஆட்சி பீடம் ஏறிய பொழுது எமது மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளிக்கின்றார்கள். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மேடைகளில் பல புரட்சிகரமான திட்டங்களை எமது மக்களுக்கு செய்வதாக உறுதியளித்திருந்தார்.இருப்பினும் எமது அடிப்படை எதிர்பார்ப்பான காணி உரிமை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் அல்லது பொறுப்பான அமைச்சரின் உறுதி வழங்காத நிலையில் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.கடந்த காலங்களில் 7 பேர்ச் நிலம் வழங்க வேண்டும் என பல போராட்டங்களுக்கு மத்தியில் அது சாதகமானது. பின்னர் 10 பேர்ச் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பல பிரயதனங்களுக்கு மத்தியில் பல எதிர்ப்புகளை தாண்டி இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்டு வரும் 1700 வீடுகளுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.நான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக கடமையாற்றிய காலப்பகுதியில் இந் நிலங்களை விடுவித்து வழங்க பல எதிர்ப்புக்களையும், சவால்களையும் சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் 2020 ஆம் ஆண்டு மக்கள் வாழும் காணிகளுக்கான உறுதி பத்திரத்தை பெற்றுக் கொடுக்க விசேட வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக தற்போது காணி மறுசீர்திருத்த ஆணைக்குழுவினால் எமது மலையாக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உறுதி பத்திரங்களை வழங்க பல சவால்களையும் எதிர்ப்புக்களையும் தாண்டி அதன் இறுதிக்கட்டத்தை அடைய நான் வழி சமைத்து கொடுத்தேன். அதன் காரணமாக இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு சட்டப் பூர்வமான காணி உறுதி பத்திரங்கள் எமது சொந்தங்களுக்கு வழங்கப்பட்ட வண்ணம் உள்ளது. இது எனக்கு மட்டற்ற பெருமையை வழங்குகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் மாடி வீடுகளை அமைப்பதற்கான யோசனை முன் வைத்துள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நாடெங்கிலும் லயன் மற்றும் தற்காலிக குழு வாழும் 170000 க்கும் அதிகமான குடும்பங்கள் பத்து பேர்ச் அடிப்படையில் தனி வீடுகளைப் பெற்றுக் கொள்ள மொத்த பெருந்தோட்ட பகுதிகளில் 1% குறைவான நிலப்பகுதியே தேவைப்படும். இது தொடர்பான ஆய்வறிக்கைகள் பல சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு என்பவற்றின் பரிந்துரையோடு நான் தயாரித்திருந்த அறிக்கை கடந்த காலங்களில் என்னால் அரசுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் முன்னாள் பிரதமரின் அசம்பந்தமான போக்கின் காரணமாக இத்திட்டத்துக்கான தீர்வு பின்னடைவானது.எனவே மலையகப் பகுதிகளில் கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்புரிமையையும் மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது. எனவே மக்களின் பெரும் எதிர்பார்ப்பும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அரசாங்கத்திடம் உள்ளது.மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பான காணி உரிமை விடயத்தில் அரசாங்கம் உரிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், எமது காணி உரிமை விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் ஏற்படின் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.