மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகளை தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்ட விசாரணை பிரிவுகளை மாகாண சபைகளிலும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க அனுமதி அளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதோடு குறித்த பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த வருடத்தைவிட மாகாண சபைகள் மூன்று மடங்கு நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளதால், ஒரு வருடத்துக்குள் நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
அந்த ஏற்பாடுகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்க அநுர அரசு எடுத்த அதிரடி முடிவு. மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகளை தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்ட விசாரணை பிரிவுகளை மாகாண சபைகளிலும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க அனுமதி அளித்துள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதோடு குறித்த பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த வருடத்தைவிட மாகாண சபைகள் மூன்று மடங்கு நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளதால், ஒரு வருடத்துக்குள் நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.அந்த ஏற்பாடுகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.