• Sep 15 2025

முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்; இரு இளைஞர்கள் கைது

Chithra / Sep 14th 2025, 1:26 pm
image


முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 9 திகதி  இரவு  உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில்  வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு  அழைத்து  சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த  உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு  செய்துள்ளனர். 

இதையடுத்து குறித்த சிறுமியை  துஷ்பிரயோகம் செய்ய  23 வயதுடைய இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில்  வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.


முல்லைத்தீவில் 15 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்; இரு இளைஞர்கள் கைது முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த 9 திகதி  இரவு  உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில்  வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு  அழைத்து  சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த  உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு  செய்துள்ளனர். இதையடுத்து குறித்த சிறுமியை  துஷ்பிரயோகம் செய்ய  23 வயதுடைய இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில்  வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும்  கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement