சுழிபுரம் திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவடிநிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று(30) காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அக் காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அப் பகுதி மக்கள் உட்பட அரசியல்வாதிகள் என பலரும் அங்கு திரண்டு காணி அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு பொது மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அங்கு காணி அளவீடு செய்வதற்கு வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தினர், காணி அளவீடு செய்யாமலே திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு. சுழிபுரம் திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருவடிநிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று(30) காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து அக் காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அப் பகுதி மக்கள் உட்பட அரசியல்வாதிகள் என பலரும் அங்கு திரண்டு காணி அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இவ்வாறு பொது மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அங்கு காணி அளவீடு செய்வதற்கு வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தினர், காணி அளவீடு செய்யாமலே திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.