• Apr 02 2025

தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க விடுதலை புலிகள் போன்ற ஓர் இரும்புக்கரம் தேவை - சிவி விக்கினேஸ்வரன்...!

Anaath / May 30th 2024, 10:54 am
image

இன்று எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இச்சச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலைமாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன். வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலைகுனியும்படியான விடயமாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழ் மக்கள்ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள். அவ்வாறே கருதப்பட்டவர்கள். ஒரு பெண் நள்ளிரவில்நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார். கிட் டத்தட்ட அவ்வாறான நிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தது. இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது. இன்று போதை தலைவிரித்தாடுகின்றது. இராணுவத்தினர், கடற்படையி னர், பொலிஸார், வான்படையி னர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூ கத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை - என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க விடுதலை புலிகள் போன்ற ஓர் இரும்புக்கரம் தேவை - சிவி விக்கினேஸ்வரன். இன்று எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இச்சச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலைமாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன். வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலைகுனியும்படியான விடயமாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழ் மக்கள்ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள். அவ்வாறே கருதப்பட்டவர்கள். ஒரு பெண் நள்ளிரவில்நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றுதான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார். கிட் டத்தட்ட அவ்வாறான நிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தது. இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது. இன்று போதை தலைவிரித்தாடுகின்றது. இராணுவத்தினர், கடற்படையி னர், பொலிஸார், வான்படையி னர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூ கத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை - என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement