• Mar 14 2026

ஆரம்பமானது ஐயப்பன் விரதம்; மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

Chithra / Nov 17th 2025, 1:23 pm
image


ஐயப்பன் விரதமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் ஐயப்ப சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிருஸ்ணா குருசாமியால் விசேட பூசைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், ஐயப்ப விரத முறைகள் தொடர்பாகவும் ஐயப்ப சாமிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து, விசேட அபிசேக ஆராதானை நடைபெற்று, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஐயப்ப சுவாமி புனித விரதமாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது.

ஐயப்பசுவாமியின் அருள் வேண்டி பல நூற்றுக்கணக்கான பக்தர்களும்,  சுவாமிமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விரதப்பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்மஸ்ரீ சுபேஸ்வரன் குரு சுவாமி தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



புத்தளம் - உடப்பு - ஆண்டிமுனை வம்மிவட்டவான் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்திலும்  மாலை அணிதல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குருசாமி சின்னையாதாஸ், தலைமையில் பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நடைபெற்றது.

மேலும்  சபரிமலை ஐயப்ப விரதம் உலகம் பூராவும் உள்ள ஐயப்ப பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன் குறித்த மலைக்கு யாத்திரையினையும் வருடா வருடம் மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில் இலங்கையில் அரசானது சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக இவ்வருடம் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


ஆரம்பமானது ஐயப்பன் விரதம்; மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள் ஐயப்பன் விரதமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் ஐயப்ப சாமிகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.இதன்போது கிருஸ்ணா குருசாமியால் விசேட பூசைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், ஐயப்ப விரத முறைகள் தொடர்பாகவும் ஐயப்ப சாமிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து, விசேட அபிசேக ஆராதானை நடைபெற்று, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஐயப்ப சுவாமி புனித விரதமாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது.ஐயப்பசுவாமியின் அருள் வேண்டி பல நூற்றுக்கணக்கான பக்தர்களும்,  சுவாமிமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இவ் விரதப்பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்மஸ்ரீ சுபேஸ்வரன் குரு சுவாமி தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.புத்தளம் - உடப்பு - ஆண்டிமுனை வம்மிவட்டவான் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்திலும்  மாலை அணிதல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் குருசாமி சின்னையாதாஸ், தலைமையில் பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நடைபெற்றது.மேலும்  சபரிமலை ஐயப்ப விரதம் உலகம் பூராவும் உள்ள ஐயப்ப பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன் குறித்த மலைக்கு யாத்திரையினையும் வருடா வருடம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இலங்கையில் அரசானது சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக இவ்வருடம் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement