2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், உள்நாட்டு அரசியல் சக்திகள்தொடர்புபட்டுள்ளதாக இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 53 வீதமானோர் நம்புவதாக கருத்துக்கணிப்பில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இவர்களில் 30 வீதமானோர் உள்நாட்டு அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால்2019 ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக 23 சதவீதமானோர் கூறியுள்ளனர்.
உள்நாட்டு அரசியல் சக்திகளின் தலையீடு இன்றி இது மேற்கொள்ளப்பட்டதாக 8 சதவீதமானோர் மாத்திரமே நம்புகின்றனர்.
39 வீதமானோர் இது தொடர்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களிலும்ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன், உள்நாட்டு அரசியல் சக்திகள்தொடர்புபட்டுள்ளதாக இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், அதாவது 53 வீதமானோர் நம்புவதாக கருத்துக்கணிப்பில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.இவர்களில் 30 வீதமானோர் உள்நாட்டு அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.அத்துடன் உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால்2019 ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்புவதாக 23 சதவீதமானோர் கூறியுள்ளனர்.உள்நாட்டு அரசியல் சக்திகளின் தலையீடு இன்றி இது மேற்கொள்ளப்பட்டதாக 8 சதவீதமானோர் மாத்திரமே நம்புகின்றனர்.39 வீதமானோர் இது தொடர்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர்.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களிலும்ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.