• Nov 24 2026

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு – காணி உரிமையாளர் கைது

Chithra / Nov 24th 2026, 10:55 am
image


ஹம்பேகமுவ, லகினகல பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதுடன், இதுதொடர்பில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் உள்ள காணியொன்றில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.


விசாரணைகளின்போது, உயிரிழந்த இளைஞர் குறித்த காணிக்குள் நுழைய முற்பட்டபோது, அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்நிலையில், குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு – காணி உரிமையாளர் கைது ஹம்பேகமுவ, லகினகல பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதுடன், இதுதொடர்பில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் உள்ள காணியொன்றில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.விசாரணைகளின்போது, உயிரிழந்த இளைஞர் குறித்த காணிக்குள் நுழைய முற்பட்டபோது, அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement