• Nov 24 2026

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Aathira / Nov 23rd 2026, 6:24 pm
image

சம்பள உயர்வு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று (23) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தமது நீண்டகாலக் கோரிக்கையான சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பேரணியின் இறுதியில், மாவட்ட செயலகத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆசிரியர்கள் கையளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி விரைந்து தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை முன்பள்ளிகளை நடாத்துவதற்குத் தாங்கள் செல்லப் போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் சம்பள உயர்வு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று (23) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தமது நீண்டகாலக் கோரிக்கையான சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.பேரணியின் இறுதியில், மாவட்ட செயலகத்தில் வைத்து வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆசிரியர்கள் கையளித்தனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த முன்பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி விரைந்து தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.மேலும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை முன்பள்ளிகளை நடாத்துவதற்குத் தாங்கள் செல்லப் போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement