• Nov 24 2026

இரகசிய தகவலையடுத்து யாழில் சிக்கிய இருவர் – 96 தோட்டாக்கள் பறிமுதல்

Chithra / Nov 23rd 2026, 11:42 am
image


யாழ்ப்பாணம் -  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.


இதன்போது, T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இரகசிய தகவலையடுத்து யாழில் சிக்கிய இருவர் – 96 தோட்டாக்கள் பறிமுதல் யாழ்ப்பாணம் -  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.இதன்போது, T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement