• Nov 24 2026

இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் துப்பாக்கிகள் – பின்னணி என்ன?

Chithra / Nov 24th 2026, 11:52 am
image

 


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.


தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சாகாமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று மாலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


குறித்த துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? அவற்றை மறைத்து வைத்திருந்தவர்கள் யார்? என்பது தொடர்பில் திருக்கோவில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் துப்பாக்கிகள் – பின்னணி என்ன  அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சாகாமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று மாலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குறித்த துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன அவற்றை மறைத்து வைத்திருந்தவர்கள் யார் என்பது தொடர்பில் திருக்கோவில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement