• Mar 15 2026

'சிறந்த ஆசிரியர் என்பது டிஜிட்டல் திரையல்ல..' 5 வயதிற்கு உட்பட குழந்தைகளின் பெற்றோருக்கு விஷேட அறிவுறுத்தல்

Aathira / Mar 14th 2026, 3:57 pm
image

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இணையவழி கல்வி முறைகளில் கற்பிப்பது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வயதில் குழந்தைகள் சமூகமாக விளையாடி கற்றுக்கொள்ளும் சூழலில் அதிகம் பயில வேண்டும். 

திரை முன் அதிக நேரம் கழிப்பது, அவர்களின் சமூகத் திறன், கவனம் மற்றும் படைப்பாற்றலை பாதிக்கக்கூடும்.

குழந்தைகள் தங்கள் சூழலை நேரடியாக அனுபவித்து கற்றுக்கொள்வதே சிறந்தது. 

அதிக டிஜிட்டல் சாதனப் பயன்பாடு பார்வை, மூளை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், இவ்வயது குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் சேர்ப்பது கல்வி தரத்தை மேம்படுத்தாது.

அது  இயல்பான வளர்ச்சியையும் பாதிக்கலாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறந்த ஆசிரியர் என்பது டிஜிட்டல் திரையல்ல, குழந்தைகள் நேரடியாக சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என குறித்த அமைச்சகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

'சிறந்த ஆசிரியர் என்பது டிஜிட்டல் திரையல்ல.' 5 வயதிற்கு உட்பட குழந்தைகளின் பெற்றோருக்கு விஷேட அறிவுறுத்தல் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இணையவழி கல்வி முறைகளில் கற்பிப்பது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், இந்த வயதில் குழந்தைகள் சமூகமாக விளையாடி கற்றுக்கொள்ளும் சூழலில் அதிகம் பயில வேண்டும். திரை முன் அதிக நேரம் கழிப்பது, அவர்களின் சமூகத் திறன், கவனம் மற்றும் படைப்பாற்றலை பாதிக்கக்கூடும்.குழந்தைகள் தங்கள் சூழலை நேரடியாக அனுபவித்து கற்றுக்கொள்வதே சிறந்தது. அதிக டிஜிட்டல் சாதனப் பயன்பாடு பார்வை, மூளை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கலாம்.அதுமட்டுமல்லாமல், இவ்வயது குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் சேர்ப்பது கல்வி தரத்தை மேம்படுத்தாது.அது  இயல்பான வளர்ச்சியையும் பாதிக்கலாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சிறந்த ஆசிரியர் என்பது டிஜிட்டல் திரையல்ல, குழந்தைகள் நேரடியாக சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என குறித்த அமைச்சகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement