• Apr 18 2026

உதய கம்மன்பில வெளியிட்ட நூல் ஒரு திட்டமிட்ட நாடகம் - சீலரத்ன தேரர் கடும் விமர்சனம்

Chithra / Apr 2nd 2026, 8:51 am
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே தென்படுகின்றது  என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு அவர் மேலும் கூறுகையில்,


இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மக்கள் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளோ அழைக்கப்படாமை பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.


உண்மையாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் இந்த நூல் தொடர்பில் உரிய விசாரணை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ தரப்பினரும் இன்றி இவ்வாறானதொரு நூலை வெளியிடுவது யாரைப் பாதுகாப்பதற்கான முயற்சி?


உதய கம்மன்பில என்பவர் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு நபர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது வரிசையாக அமர்ந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது. 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக விரல் நீட்டுவதை விடுத்து அன்றைய காலப்பகுதியில் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?


குறித்த நிகழ்வில் உரையாற்றப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சரியானவை அல்ல என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியமையானது அவர் எடுத்த மிகச் சரியான தீர்மானமாகும். 


கம்மன்பில போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மக்களின் மனதை விகாரப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் முயற்சியாகும். இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.என்றார்.

உதய கம்மன்பில வெளியிட்ட நூல் ஒரு திட்டமிட்ட நாடகம் - சீலரத்ன தேரர் கடும் விமர்சனம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே தென்படுகின்றது  என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்,இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மக்கள் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளோ அழைக்கப்படாமை பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.உண்மையாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் இந்த நூல் தொடர்பில் உரிய விசாரணை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ தரப்பினரும் இன்றி இவ்வாறானதொரு நூலை வெளியிடுவது யாரைப் பாதுகாப்பதற்கான முயற்சிஉதய கம்மன்பில என்பவர் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு நபர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது வரிசையாக அமர்ந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக விரல் நீட்டுவதை விடுத்து அன்றைய காலப்பகுதியில் ஏன் மௌனமாக இருந்தீர்கள்குறித்த நிகழ்வில் உரையாற்றப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சரியானவை அல்ல என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியமையானது அவர் எடுத்த மிகச் சரியான தீர்மானமாகும். கம்மன்பில போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மக்களின் மனதை விகாரப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் முயற்சியாகும். இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement