• Feb 21 2025

வரவு செலவுத் திட்டம் பொருட்களின் விலையை குறைக்கும் விடயமல்ல! அமைச்சர் கிரிசாந்த

Chithra / Feb 17th 2025, 9:49 am
image

 

வரவு செலவுத் திட்டம் என்பது பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயமல்ல என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக் கூடிய அத்திவாரத்தைப் போடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அதேவிதமாக அமுல்படுத்தாது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்தவற்றை நிறைவேற்றி முன்னோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தினால் தமக்கு போட்டி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வரவு செலவுத் திட்டம் பொருட்களின் விலையை குறைக்கும் விடயமல்ல அமைச்சர் கிரிசாந்த  வரவு செலவுத் திட்டம் என்பது பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயமல்ல என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.வத்தளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக் கூடிய அத்திவாரத்தைப் போடுவதாக குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அதேவிதமாக அமுல்படுத்தாது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்தவற்றை நிறைவேற்றி முன்னோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் வெற்றிபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தினால் தமக்கு போட்டி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement