பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக 13 வாக்குகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய சபை அமர்வில் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சனினால் முன்வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
ஆதரவாக தமிழரசுக்கட்சியின் பத்து உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஒரு உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி01உறுப்பினரும் ,சுயேட்சைக்குழு இரண்டின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு ஒன்றின் இன் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
நடுநிலைமையாக ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
20உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும் ,தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாகஒரு , சுயேட்சைக்குழு ஒரு சார்பாக ஒருஉறுப்பினரும், சுயேட்சைக்குழு இரண்டு- ஒரு உறுப்பினருமாக இருபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவு பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக 13 வாக்குகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய சபை அமர்வில் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சனினால் முன்வைக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.ஆதரவாக தமிழரசுக்கட்சியின் பத்து உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஒரு உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி01உறுப்பினரும் ,சுயேட்சைக்குழு இரண்டின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.எதிராக தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு ஒன்றின் இன் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.நடுநிலைமையாக ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.20உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும் ,தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாகஒரு , சுயேட்சைக்குழு ஒரு சார்பாக ஒருஉறுப்பினரும், சுயேட்சைக்குழு இரண்டு- ஒரு உறுப்பினருமாக இருபது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.