திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகரில் இருந்து கூபா நகருக்குச் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் (km) தூரமான வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்று (15) காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து கொண்டார்.
அத்துடன், கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச சபையின் மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, "இன்று நாங்கள் மூன்றரை கிலோமீட்டர் தூரமான வீதியை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
பல வீதிகளை ஆரம்பிக்க உள்ளோம்; அவற்றில் ஒன்றுதான் இந்த வீதியாகும். கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. இதற்கு 24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இதுபோன்று பல வீதிகளைச் செய்யவுள்ளோம் என்றும், அதற்கு 180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்தப் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பைசல் நகர் முதல் கூபா நகர் வரையிலான வீதிப் புனரமைப்புப் பணி, அப்பிரதேச மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா வீதி அபிவிருத்தி ஆரம்பம்; 24 மில்லியன் நிதி ஒதுக்கீடு திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகரில் இருந்து கூபா நகருக்குச் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் (km) தூரமான வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்று (15) காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன.கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.இந்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து கொண்டார்.அத்துடன், கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச சபையின் மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, "இன்று நாங்கள் மூன்றரை கிலோமீட்டர் தூரமான வீதியை ஆரம்பித்து வைத்துள்ளோம்.பல வீதிகளை ஆரம்பிக்க உள்ளோம்; அவற்றில் ஒன்றுதான் இந்த வீதியாகும். கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. இதற்கு 24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.மேலும் அவர், இதுபோன்று பல வீதிகளைச் செய்யவுள்ளோம் என்றும், அதற்கு 180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்தப் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பைசல் நகர் முதல் கூபா நகர் வரையிலான வீதிப் புனரமைப்புப் பணி, அப்பிரதேச மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.